காஞ்சிபுரம் ஒரகடத்தில் ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை - 3 தனிப்படைகள் விசாரணை

காஞ்சிபுரம் ஒரகடத்தில் ரூ.1.50 கோடி டாஸ்மாக் பணம் கொள்ளை - 3 தனிப்படைகள் விசாரணை
News Image

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் டாஸ்மாக் பணத்தை காருடன் கடத்தி சென்ற கும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் பணத்தை வங்கி ஏஜெண்டுகள் டாஸ்மாக் நிர்வாகம் வசூல் செய்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு வங்கி ஏஜெண்ட் தாஸ் மற்றும் ஓட்டுநர் ஹபீப் ஆகிய இருவரும் வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் காஞ்சிபுரம் ஒரகடம் பகுதியை சுற்றியுள்ள 22 கடைகளில் வசூல் செய்துள்ளனர். 23வது கடையான ஒரகடம் மதுபான கடையில் வசூல் செய்வதற்காக சென்றுள்ளனர்.

ஒரகடம் கடையில் தாஸ் பணத்தை வாங்குவதற்காக கடைக்குள் சென்ற நிலையில், ஓட்டுநர் மட்டும் காரில் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வேகமாக வந்து கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநருக்கும் அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 5க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் காரில் வசூல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பணத்துடன் காரையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ஹபீப் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கார் குறித்த தகவல்களை சேகரித்து உடனடியாக சுற்று வட்டார காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் படப்பை அருகே காரணிதாங்கலில் சாலையோரம் வெள்ளை நிற கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று பார்த்தபோது அது பணத்துடன் திருடப்பட்ட கார் என்பது தெரிய வந்தது. காரில் சோதனை செய்தபோது அதிலிருந்த ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து வங்கி ஏஜெண்ட் தாஸ் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்துடன் தப்பியவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேசமயம் பணம் காரில் இருந்த தகவல் முன்கூட்டியே மர்ம நபர்களுக்கு எப்படி தெரிந்தது?.. இது திட்டமிட்டு நடைபெற்றதா?, இதில் பணம் வசூல் செய்யும் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் வசூல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்டு நடந்த கொள்ளையா? உள் ஆட்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks