தங்கத்தின் விலையானது எப்போது இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. 2021ம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது அடுத்த சில வருடங்களில் ஒரு லட்சத்தை தாண்டியது. 2026ம் ஆண்டு இறுதியில் ஒரு சவரன் 2 லட்சத்தை எட்டும் கூறப்பட்டு வந்தது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை சென்று மீண்டும் இறங்கியது.

மீண்டும் ஜெட் வேகத்தில் தங்கம்

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியதும் தங்கம் விலை எதிர்பாராத விதமாக சரசரவென இறங்கி நகைப்பிரியர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 9000 ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்தது. அக்டோபர் 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ரூ.3,720 குறைந்தது. தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை உயரும் என நகை வியாபாரி சங்கத்தலைவர் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றார் போல தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று ஏரியதா இறங்கியதா என்பதை பார்க்கலாம்.

நேற்று வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.45 உயர்ந்து ரூ. 12,775க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Gold Rate Today: வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம்.. கவலையில் நகைப்பிரியர்கள்!

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 03) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ. 12,800ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,964ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,11,712ஆக விற்பனையாகிறது. தீபாவளி நெருங்கம் நிலையில் தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் ரூ.560 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரசரவென குறைந்த வந்த நிலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article