தங்கம் விலை ஏற்கனவே புதிய உச்சத்தை எட்டிய நிலையில் திடீரென அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் எதிர்பாராத விதமாக சரசரவென குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதாவது அக்டோபர் மாதம் சவரனுக்கு சுமார் 7000 ரூபாய் அளவுக்கு குறைந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.300 உயர்ந்து ரூ. 13,100க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து ரூ. 1,04,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 05) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ. 13,385ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,602ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,16,816ஆக விற்பனையாகிறது. தீபாவளி நெருங்கம் நிலையில் தொடர்ந்து நான்காவது நாட்களாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.5,240 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக சரசரவென குறைந்த வந்த நிலையில் நேற்று 10 ரூபாய் திடீரென உயர்ந்தது. ஆனால் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் விலை ரூ.210க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article