Gold Rate Today: அடித்தது யோகம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 சரிந்த தங்கம் விலை! விரைவில் ரூ.78,000-க்கு குறையுமா?

Gold Rate Today: அடித்தது யோகம்! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 சரிந்த தங்கம் விலை! விரைவில் ரூ.78,000-க்கு குறையுமா?
News Image

எப்போது இல்லாத வகையில் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் கிடுகிடுவென உயர்ந்து ரூ.1.34 லட்சமத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அடுத்த ஆண்டு ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என்று செய்திகள் வெளியாகின. இது நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்பாராத விதமாக தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் சரசரவென குறைந்து வந்தது.

பின்னர் தீபாவளி பண்டிகை காரணமாக தங்கம் விலை உயரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதத்தில் தங்கம் விலை சரிந்தது. கடந்த 7 நாட்களில் மட்டும் சவரனுக்கு சுமார் ரூ.6000 குறைந்து ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை விரிவாக பார்க்கலாம்.நேற்று விலையில் மாற்றம் இல்லை

நேற்று தங்கம் விலை சரசரவென குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.70 குறைந்து ரூ.12,470க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்றைய தங்கம் விலை என்ன?

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 18) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,040 ரூ.97,720ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,215ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13,604ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,08,832ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் சரிவை சந்தித்து  வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் நகைப்பிரியர்கள் இருந்து வருகின்றனர். தங்கம் விலை ஒரு சவரன் ரூ.78,000 வரை குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆகையால் தங்கத்தை இப்போதே வாங்கலாமா அல்லது காத்திருந்து வாங்கலாமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலை அப்டேட்

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks