Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?

Chennai Airport: நாங்க ரெடி, நீங்க எப்போ வருவீங்க? சென்னை புதிய விமான நிலையம் - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆய்வு?
News Image

Chennai 2nd Airport: சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான பரந்தூரை ரத்து செய்த பிறகு, 2 புதிய இடங்களை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2வது விமான நிலையம் - பதில் தராத மத்திய அரசு

கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால், விவசாயிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பரந்தூர் திட்டத்தை ரத்து செய்தது. அதேநேரம், அதற்கு மாற்றாக இரண்டு புதிய இடங்களை பரிந்துரைத்து கடந்த செப்டம்பர் மாதமே தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், அங்கு பூர்வாங்க சாத்தியக்கூறு சோதனைகளை மேற்கொள்ள, விமான நிலைய நிர்வாக ஆணையத்திடமிருந்து தற்போது வரை எந்தவித பதிலும் வரவில்லையாம். சில வாரங்களுக்கு முன்பாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து, மாநில அரசின் கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

”தமிழ்நாட்டின் முதலீட்டு சூழலை பாதிக்கும்”

இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள தகவலானது, “எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைந்து சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. ஆனால், விமான நிலைய நிர்வாக ஆணையத்திடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ இதுவரை எந்தவித ஒப்புதலும் கிடைக்கவில்லையாம்.  இதுதொடர்பாக பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பிறகும் கூட டெல்லியிலிருந்து எந்தவித பதிலும் வராதது வருத்தம் அளிக்கிறது. கடிதத்திற்கான பதிலை பெறவே மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டுமானால், திட்டத்திற்கான மற்ற ஒப்புதல்களுக்கு எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என நினைத்து பாருங்கள். இத்தகைய சூழலானது தமிழ்நாட்டிற்கான முதலீட்டு சூழலை பாதிக்கக் கூடும்” என தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: Vijay TN Govt: தொல்லை கொடுக்க தொடங்கிய பாஜக..? தலைவலியில் ஆளும் தவெக - சமாளிப்பாரா CM விஜய்?

அரசு பரிந்துரைத்த 2 இடங்கள்:

கடந்த செம்படம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் விமான நிலைய நிர்வாக ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. அதில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்காக கும்மிடிப்பூண்டி மற்றும் செய்யூர் பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களை பரிந்துரைப்பதாகவும், அங்கு ஒப்புதலுக்கு முந்தைய சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என கோருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் பிறகும் பல முறை மத்திய அரசுக்கு இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

”அனுமதி எளிதாக கிடைக்கப்போவதில்லை”

தமிழ்நாடு அரசு பரிந்துரைத்துள்ள இரண்டு இடங்களுமே மிகவும் சிக்கலானதாக உள்ளதால், அவற்றுக்கு அனுமதி வழங்குவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கும்மிடிப்பூண்டியானது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. மற்புறம் செய்யூரானது கல்பாக்கம் அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ளது. எனவே இந்த இரண்டு பகுதிகளுமே சென்னைக்கு ஏதுவானதாக இருக்காது என்பதால், அவற்றுக்கான ஒப்புதல் கிடைப்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதனிடையே, இப்போதும் கூட தாமதமாகவில்லை. ரத்து செய்த பரந்தூரை கூட மீண்டும் பரிசீலித்து அங்கேயே புதிய விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks