G-Pay பணம் செலுத்தியதில் தகராறு !! தட்டிக்கேட்ட பால் வியாபாரி சரமாரியாகக் குத்திக் கொலை

G-Pay பணம் செலுத்தியதில் தகராறு !! தட்டிக்கேட்ட பால் வியாபாரி சரமாரியாகக் குத்திக் கொலை
News Image

"G - Pay மூலம் பணம் செலுத்தியதில் தகராறு"

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா , புளியம்பட்டி அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் 45 வயதுடைய நடேஷ்குமார். இவர் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தேவி சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடேஷ்குமார் கைலாசபுரம் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.

அப்போது அதே கடைக்கு கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாராஜா என்பவரும் பொருட்கள் வாங்க வந்துள்ளார். பொருட்களை வாங்கிய மகாராஜா , அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் பணம் தனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை எனக் கடை உரிமையாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடை உரிமையாளருக்கு ஆதரவாகப் பேசிய நடேஷ்குமார், மகாராஜாவைக் கண்டித்துள்ளார். இதனால் நடேஷ்குமாருக்கும் மகாராஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

"வாக்குவாதத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து"

பின்னர் , வீட்டிற்குச் சென்று பணம் எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு மகாராஜா அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்த மகாராஜா, கடை உரிமையாளரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த நடேஷ்குமாருக்கும் மகாராஜாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மகாராஜா , தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடேஷ்குமாரைச் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நடேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த நாரைக்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடேஷ்குமாரின் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் , மணியாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், புளியம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, நாரைக்கிணறு காவல் உதவி ஆய்வாளர் தரணியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் மகாராஜாவைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடேஷ்குமாரின் மனைவி தேவி ஏற்கெனவே விபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில் , தற்போது தந்தையும் கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தாய் , தந்தை இருவரையும் இழந்துள்ள குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் கல்விச் செலவுகளுக்கு யார் உதவுவார்கள் என்ற கவலை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks