பயணிகள் கவனத்திற்கு! 10 முக்கிய ரயில்களின் ரூட் திடீர் மாற்றம்; எங்கெல்லாம் நிற்காது? முழு விவரம் இதோ

பயணிகள் கவனத்திற்கு! 10 முக்கிய ரயில்களின் ரூட் திடீர் மாற்றம்; எங்கெல்லாம் நிற்காது? முழு விவரம் இதோ
News Image

ரயில் பயணிகளின் கவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு சிக்னல் அமைக்கும் பணிகள் காரணமாக, டிசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் பல்வேறு விரைவு ரயில்களின் வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குடூர் கோட்டத்திற்குட்பட்ட ரேணிகுண்டா யார்டில் நடைபெற உள்ள முன்கூட்டிய சிக்னல் இணைப்புப் பணிகள் மற்றும் சிக்னல் இணைப்புப் பணிகள் மொத்தம் 48 நாட்கள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகப் பல்வேறு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதுடன், சில ரயில் நிலையங்களில் அவற்றின் நிறுத்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாற்றுப் பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

டிசம்பர் 9, 16, 23: சார்லப்பள்ளி - திருச்சி விரைவு ரயில் (17077) மற்றும் திருச்சி - சார்லப்பள்ளி விரைவு ரயில் (17078) ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது.

டிசம்பர் 9, 16, 23: நரசாபூர் - திருவண்ணாமலை விரைவு ரயில் (17291) குடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும். ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 10, 17, 24: திருவண்ணாமலை - நரசாபூர் விரைவு ரயில் (17292) மாற்றுப் பாதையில் இயக்கப்படும். சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 9, 16, 23: ஹைதராபாத் - கன்னியாகுமரி விரைவு ரயில் (17069) குடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி வழியாக இயக்கப்படும். ரேணிகுண்டா, திருப்பதி, பாகாலா, சித்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 11, 18, 25: கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயில் (17070) மாற்றுப் பாதையில் இயக்கப்படும். சித்தூர், பாகாலா, திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 14, 21: திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா விரைவு ரயில் (16787) காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், குடூர் வழியாக இயக்கப்படும். சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 16, 23: புதுச்சேரி - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (12868) காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், குடூர் வழியாக இயக்கப்படும். திருப்பதி, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 9, 16, 23: மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - மதுரை விரைவு ரயில் (22101) குட்டி, தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம், அரக்கோணம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். கடப்பா, ராஜம்பேட்டை, ரேணிகுண்டா, திருத்தணி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

டிசம்பர் 12, 19, 26: மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் விரைவு ரயில் (11017) குட்டி, தர்மாவரம், கிருஷ்ணராஜபுரம், அரக்கோணம் வழியாக இயக்கப்படும். தடிபத்திரி, எர்ரகுண்ட்லா, கடப்பா, ராஜம்பேட்டை, ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

தாமதமாக இயக்கப்படும்

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, அகமதாபாத் - திருச்சி விரைவு ரயில் (19419) டிசம்பர் 10, 17, 24 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திலிருந்து காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு வழியில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, டிசம்பர் மாதத்தில் மேற்கண்ட தேதிகளில் இந்த ரயில்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது ரயில்களின் மாற்றப்பட்ட வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிந்துகொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks