E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
News Image

E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலக்கப்பட்டதாக வெளியான விவரம் வாகன ஓட்டிகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

E-20 பெட்ரோலும், சர்ச்சையும்!

பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலந்து, வாகன எரிபொருளாக உபயோகிப்பதே E-20 பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் E-20 பெட்ரோலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக கர்நாடக மாநில அரசுத்தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களின் ஆய்வகங்களுக்கே அனுப்பி சோதனை செய்ததாகவும், முடிவுகளில் தெளிவின்மை காரணமாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 31% வரை பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டது தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31% எத்தனாலா? வாகன ஓட்டிகள் பேரதிர்ச்சி!

பெட்ரோலில் அளவுக்கு அதிகமான எத்தனால் கலந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்செய்தி வாகன ஓட்டிகள் அச்சமடைய செய்துள்ளது. மேலும், பழைய வாகனங்கள் E-20 பெட்ரோலுக்கு ஏற்றார்போல வடிவமைக்கப்படாததால் மைலேஜ் குறைவு மற்றும் என்ஜின் பாதிப்படையும் அபாயம் உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் E-20 பெட்ரோல் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

மத்திய அரசுக்கு கர்நாடக அரசு வலியுறுத்தல்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத், பெட்ரோலில் 20%-க்கும் அதிகமான எத்தனால் கலப்பு கண்டறியப்பட்டது நுகர்வோரை பாதிப்படைய செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எத்தனாலின் உண்மையான கலப்பு சதவீதம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks