மனைவி மீது சந்தேகம்... ஒரே குடும்பத்தில் 7 பேர் கொலை! பெங்களூருவில் கார் ஓட்டுநரின் பயங்கரம்

மனைவி மீது சந்தேகம்... ஒரே குடும்பத்தில் 7 பேர் கொலை! பெங்களூருவில் கார் ஓட்டுநரின் பயங்கரம்
News Image

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவி மீதான சந்தேகம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை கார் ஓட்டுநர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை வெவ்வேறு இடங்களில் வீசியதாகக் கூறப்படும் நிலையில், போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கொலைச் சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவரின் 17 வயது மகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் தொடர்ந்த பிரச்சினை!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் இந்துசேகர். இவர் வாடகைக் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, சுனிதாவின் தாயார் மற்றும் சகோதரர்கள் தங்களது குடும்ப விவகாரங்களில் தலையிடுவதை இந்துசேகர் விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மனைவியின் நடத்தையிலும் இந்துசேகருக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுனிதாவின் தாயார், சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்துசேகரை கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர் பழிவாங்கத் திட்டமிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மனைவியை ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை!

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி இந்துசேகருக்கும் அவரது மனைவி சுனிதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இந்துசேகர், வீட்டிலிருந்த ஆட்டுக்கல்லால் சுனிதாவின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சுனிதா உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடலை சாக்குப் பையில் கட்டி காரில் எடுத்துச் சென்ற இந்துசேகர், நந்தி மலைப் பகுதியில் வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே சுனிதாவைக் காணவில்லை என அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, அவர் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றிருப்பதாகக் கூறி இந்துசேகர் சமாளித்துள்ளார்.

மாமியார் உட்பட குடும்பத்தினரும் கொலை!

மனைவியைக் கொலை செய்த பிறகும் தனது ஆத்திரம் தணியாத இந்துசேகர், அடுத்ததாக மாமியார் ரூபாவதியையும் கொலை செய்து உடலை அதே மலைப்பகுதியில் வீசியதாகக் கூறப்படுகிறது.

தாய் வீட்டுக்குத் திரும்பாததால் அவரைத் தேடி வந்த மைத்துனர் சிவகுமார், அவரது மனைவி திவ்யா மற்றும் இவர்களது 7 வயது மகன் புனித் ஆகியோரையும் ஆட்டுக்கல்லால் தாக்கிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு மைத்துனர் சங்கர் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோரையும் வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மனைவி சுனிதா உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நளினி மாயமான புகார்... சிக்கிய கார் ஓட்டுநர்!

இந்த கொடூரக் கொலைச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு நளினி மாயமானது தொடர்பான புகாரே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தனது மகள் நளினியைக் காணவில்லை என்று அவரது தாயார் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ஸ்ரீராமபுரம் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணையில் நளினி கடைசியாக இந்துசேகரின் வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்துசேகரைப் பிடித்து போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது, குடும்பத்தினர் அனைவரும் சுற்றுலா சென்றிருப்பதாக அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மனைவி உட்பட 7 பேரையும் கொலை செய்ததாக இந்துசேகர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில், நந்தி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்களை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

17 வயது மகளுக்கும் தொடர்பா? போலீஸார் விசாரணை!

இந்தச் சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், கொலைச் சம்பவங்களுக்கு இந்துசேகரின் 17 வயது மகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தொடர்பு மற்றும் பங்கு குறித்து விசாரணையின் முடிவிலேயே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

இதற்கிடையே, 7 பேரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் இந்துசேகர், அவர்களைக் கொன்றதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

குடும்பத் தகராறு, மனைவி மீதான சந்தேகம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks