தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பெற்றதும் 4775 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் 717 கடைகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கோடிக்கும், வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வருமானத்தை அளிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் விற்பனை புதிய உச்சத்தை எட்டும்.

டாஸ்மாக் விற்பனை

அந்த வகையில் தீபாவளி கொண்டாடும் மக்களில் ஒரு தரப்பினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டிய நாட்களில், டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை களைகட்டும்.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 7ம் தேதி சுமார் ரூ.234 கோடியே 75 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகையான நேற்று மட்டும் சுமார் ரூ.206 கோடியே 63 லட்சத்துக்கும் என மொத்தம் ரூ.441 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

மண்டல வாரியாக மதுவிற்பனை

மண்டல வாரியாக மதுவிற்பனை குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் சென்னை மற்றும் தூங்கா நகரமான மதுரை ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடம் பிடித்து வந்தன. இந்த முறை எந்த மண்டலம் முதலிடத்தை பிடித்துள்ளது என்பதை பார்ப்போம். சென்னையில் ரூ. 95.85 கோடி, திருச்சியில் ரூ. 98.97 கோடி, சேலத்தில் ரூ. 87.52 கோடி, மதுரையில் ரூ. 88.38 கோடி, கோவையில் ரூ. 70.66 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் ரூ. 98.97 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளிக்கு மறுநாளான இன்றும் விடுமுறை என்பதால் மது விற்பனை இன்றும் ரூ.200 கோடியை நெருங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக பார்த்தால் மூன்று நாட்களில் ரூ.600 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article