Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!

Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!
News Image

வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. முதலில், அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

20 சதவீதம் போனஸ்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி, 2025-2026 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கிட முதலமைச்சர்  ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு நிறுவனங்களில் ஒதுக்கக்கூடிய உபரித் தொகையின் அடிப்படையில், அந்நிறுவனப் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) வழங்கப்படும்.

உபரித் தொகை இல்லாத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். கூட்டுறவுத் துறையில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு, நிகர இலாபம் ஈட்டும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

44,573 பணியாளர்கள் பயனடைவார்கள்

மேலும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3,000 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400 வீதம் கருணைத் தொகையாக வழங்கப்படும். இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 44,573 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.49.69 கோடி மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களை ஊக்குவிப்பதுடன், தங்களது குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.

சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு போனஸ்

அதேபோல் தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-2026ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி - || ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.

இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5190 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க ரூ.351.40 இலட்சம் செலவினம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks