Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?

Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
News Image

தமிழகத்தில் தென் கிழக்கு பருவமழை நிறைவு பெற்றதை அடுத்து வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே முதலில் அர்னாப் புயல் உருவானது. இது தமிழகத்தை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவுக்கு சென்றது. அங்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி

பின்னர் முரசு புயல் உருவானது. இந்த புயல் சென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவும் ஆந்திரா நோக்கியே சென்றது. ஆனால் தமிழத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள்  ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது.  இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலு பெறக்கூடும். ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோர பகுதிகளை நோக்கி வருவதற்கு வாய்ப்பு குறைவு.  ஆந்திரா பகுதி நோக்கி செல்ல சாதகமான சூழல் உள்ளது.

அக்வான் புயல்?

இது அடுத்தடுத்து வலுப்பெற்று புயலாக மாறும் பட்சத்தில் அக்வான்’ (Akvan) என்று பெயரிடப்படும். இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும் தமிழக தெற்கு கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்த வரை மழைக்கு வாய்ப்பு குறைவு என சென்னை மண்டல வானிலை இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.

பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழங்கிய பெயர்கள் சூட்டுவது வழக்கம். இதற்கு முன்னர் வந்த அர்னாப் என்ற பெயரை வங்கதேசமும், முரசு என்ற பெயரை இந்தியாவும் வழங்கின. இவற்றைத் தொடர்ந்து அடுத்த 3வது புயலுக்கு ‘அக்வான்’ என்ற பெயரை ஈரான் வழங்கியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks