தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அர்னாப் புயலை அடுத்து முரசு புயல் உருவானது. இந்த இரண்டு புயல்களும் ஆந்திரா நோக்கி சென்றுவிட்டது. இதனால் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும் பல்வேறு இடங்களில் 25 செ.மீ. பதிவானதை அடுத்து தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்தது. உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழையை கொடுக்கவில்லை. இந்நிலையில் நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் உருவாகும் புயல் தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Cyclone Murasu: கோரத்தாண்டவம் ஆடிய முரசு புயல்.. 120 கி.மீ. வேகத்தில் காற்று.. தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தை நோக்கி வரும் புயல்

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: நவம்பர் 15ம் தேதி வரை தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் பெரிதளவிற்கு வராது. ஆனால் நவம்பர் 15ம் தேதிக்கு மேல் புதிய புயலுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் உருவாகும் புயல்கள் தமிழகத்தை நோக்கியே வரும். ஆகையால் இனி வரும் நாட்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இதுவரை இயல்பைவிட 18 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் வட தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?

11 மாவட்டங்களில் மழை

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 முதல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article