Cyclone Murasu: தீவிரமடையும் முரசு புயல்! சென்னையில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!

Cyclone Murasu: தீவிரமடையும் முரசு புயல்! சென்னையில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
News Image

வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் அர்னாப் புயல் உருவானது. இந்த புயல் ஆந்திராவை நோக்கி சென்றதால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பொழிவை கொடுக்கவில்லை. இதனையடுத்து 2வது புயல் தற்போது உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு இந்தியா சார்பில் முரசு என பெயர் வைக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  இந்த முரசு புயல் நவம்பர் 3-ம் தேதி நெல்லூர்-நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.  இதன் காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரமடையும் முரசு புயல்

இந்நிலையில் முரசு புயல் எப்படி இருக்கும், தமிழகத்தில் மழையின் தாக்கம் எப்படி என்பது தொடர்பாக முக்கிய அப்டேடை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: முரசு புயல் தெற்கு ஆந்திரக் கடலோர பகுதியான காவலி பகுதிக்கு அருகில், ஒரு தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் வளிமண்டல மற்றும் கடல்சார் சூழல்கள், இந்த புயல் மேலும் வலுவடைவதற்கு மிகவும் சாதகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!

புயலை விரைவாக வலுவிழக்கச் செய்யக்கூடிய இரண்டு முக்கிய பிரச்சனைகள்

பலமான காற்று

காற்றின் வேகம் மற்றும் திசையில் மாற்றமானது புயலின் செங்குத்து அமைப்பைச் சாய்த்து, அதன் மேல்மட்ட மேகங்களைச் சுழற்சி மையத்திலிருந்து நகர்த்திவிடக்கூடும்; இது புயலின் கட்டமைப்பை சீர்குலைத்துவிடும்.  குறிப்பாக, 30 நாட்ஸ்களுக்கு அதிகமான காற்றின் வேகம் மற்றும் திசை மாற்றம் புயல் மேலும் வலுவடைவதை தடுக்கும்.

வறண்ட காற்று

புயலுக்கு மத்தியில் வறண்ட காற்று ஊடுருவும். வறண்ட காற்று புயலின் சுழற்சிக்குள் நுழைந்து அதன் மையப்பகுதியை அடைந்தால், அது வெப்பச்சலனத்தைக் குறைத்து, புயலுக்குத் தேவையான ஈரப்பத விநியோகத்தைத் தடுத்துவிடும்.

கடல் சூழல்

புயல் செல்லும் பாதையில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை 29°C-க்கு மேல் உள்ளது. இத்தகைய  கடல் நீர், தீவிர வெப்பச்சலனத்தைத் தக்கவைக்கவும், புயல் மேலும் வலுவடையத் தேவையான வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் வழங்குகிறது. ஒட்டுமொத்த சூழலும் புயல் வலுவடைவதற்கே சாதகமாக உள்ளது. இதனால் முரசு புயல் இன்னும் வலிமை பெற வாய்ப்புள்ளது. கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

KTCCல் மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் நாளை காலை முதல் மழை பெய்யக்கூடும். அதிகனமழை பெய்யக்கூடிய பகுதி பெரும்பாலும் கடற்பகுதியிலேயே நகர்ந்து விடுகிறது. ஆனாலும் நிலப்பகுதியில் பெரிய அளவில் மழை இருக்காது. வட சென்னையின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை மேக கூட்டங்கள் இருந்தால் கனமழை பெய்யலாம். மேலும், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks