வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து முதல் புயல் வங்கக்கடலில் கடந்த 25-ம் தேதி அர்னாப் புயலாக உருவானது. இந்த புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஆந்திராவை புரட்டி எடுத்தது. இதனால் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் 25 செ.மீ. மேல் பதிவானது. இந்நிலையில் தற்போது 2-வது புயல் தற்போது உருவாகியுள்ளது. இது தற்போது அதி தீவிர புயலாக உருவாகியுள்ளது. இதற்கு முரசு என பெயரிடப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

இந்த புயலானது நவம்பர் 3-ம் தேதி அன்று நெல்லூர்-நர்சாப்பூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று திருவள்ளூர், மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: Cyclone Murasu: தீவிரமடையும் முரசு புயல்! சென்னையில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!

நாளை காலை முதல் மழை எச்சரிக்கை

மேலும் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் நாளை காலை முதல் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

17 மாவட்டங்களுக்கு மழை

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருள்ளூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, நீலகிரி, நெல்லை, திருப்பத்தூர், வேலூர், மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள்?

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் இருந்து வருகின்றனர். தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு அல்லது அதிகாலையில் கனமழையின் பெய்யும் பட்சத்தில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

Source: Read Full Article