வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அர்னாப் புயல் உருவானது. இது சென்னையில் கரையை கடக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திரா நோக்கி சென்றது. இந்த புயல் அக்டோபர் 28ம் தேதி ஏனாம் கடலோரப் பகுதிகளில் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்த போது 150 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. மேலும் பல்வேறு இடங்களில் 25 செ.மீ. பதிவானதை அடுத்து தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்தது. இந்த புயலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

ருத்ரதாண்டவம் ஆடிய முரசு புயல்

அர்னாப் புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளை ஆந்திர மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசின் உதவியை நாடியுள்ளது. அர்னாப் புயலின் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்குள் முரசு புயல் உருவானது. இந்த தீவிர புயலாக நேற்று வலுப்பெற்று ஆந்திராவின் நெல்லூருக்கும் - நரசபூருக்கும் இடையே ஒங்கோலுக்கு அருகே அதிகாலை 3.30 முதல் 5.30 மணிக்குள்ளாக கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது 120 கி.மீ. வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த 7 நாட்களில் ஆந்திராவை தாக்கிய 2-வது புயல் இதுவாகும்.

இதையும் படிங்க: School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

போக்குவரத்து பாதிப்பு

ஆந்திராவின் நெல்லூர், குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. முரசு புயலை முன்னிட்டு கடலோரப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக பேருந்து, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகளும் பாதிப்புக்கப்பட்டுள்ளன.

அடுத்த 3 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழை

இதனிடையே, அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 7 முதல் 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article