Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!

Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
News Image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தொடங்கியது. இதனையடுத்து வங்கக்கடலில் அர்னாப் மற்றும் முரசு ஆகிய இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவானது. இந்த இரண்டு புயல்களும் ஆந்திரா நோக்கி சென்றது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.

அக்வான் புயல்

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16ம் தேதி மாலை மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு அக்வான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக்வான் என்றால் அரக்கன் அல்லது அசுரன் என்பதாகும்.

இதையும் படிங்க: Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!

இந்நிலையில் அக்வான் புயலின் அகர்வு  எப்படி இருக்கும்? என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமசந்திரன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது நாளை மறுதினம் அக்வான் புயல் உருவாகிறது. அதனைத்தொடர்ந்து 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தீவிர புயலாக வலுப்பெறுகிறது.

தமிழகத்தில் கரையை கடக்கும் புயல்?

அரேபிய, பசிபிக் உயர் அழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை ஆகிய காரணிகளால் புயல் ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று பின்னர் மெதுவாக நகரும். 19-ம் தேதி இரவு முதல் 20-ம் தேதி காலை வரை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அரேபிய உயர் அழுத்தம் காரணமாக இந்த புயல் தமிழகம் நோக்கி அதிலும் குறிப்பாக வட தமிழகப் பகுதிகளில் சென்னை, கடலூரை மையமாக வைத்து கரையை கடக்க 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடதமிழகத்தில் நல்ல மழை

அர்னாப், முரசு போல தமிழகத்தை இந்த புயல் ஏமாற்றாது. வடதமிழகத்துக்கு நல்ல மழையை கொடுத்துதான் செல்லும். இதில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் தீவிர மழை இருக்கும். இந்த புயலால் காற்று பாதிப்பு இருக்காது. கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக இருப்பதால் நல்ல மழையை எதிர் பார்க்கலாம். இந்த புயல் தீவிரப் புயலாகவே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks