"காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

"காலத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
News Image

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதியே தேர்ச்சி பெறுவதால், நீட் தேர்வு முறையை மறுஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டியது கட்டாயம் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் எத்தனை முறை நீட் தேர்வு எழுதினார்கள் என்பது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள், நீட் தாக்கம் குறித்து பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளன. மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 95%க்கும் மேற்பட்டோர் இரண்டுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதி தான் கனவை சாத்தியமாக்கிக் கொள்ள முடியும் என்றால் நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறியதா? என்பது தான் அவற்றில் முதன்மையான வினா.

2025&26&ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்த 650 மாணவர்களில் வெறும் 33பேர், அதாவது 5 விழுக்காட்டினர் மட்டும் தான் நீட் தேர்வில் முதல் முயற்சியில் போதிய மதிப்பெண் பெற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 95 விழுக்காட்டினரில், அதாவது 617 பேரில், 235 பேர் இரண்டாவது முறையும், 283 பேர் மூன்றாவது முறையும், 91 பேர் நான்காம் முறையும், 6 பேர் ஐந்தாம் முறையும், இருவர் 6 அல்லது அதற்கும் கூடுதலான முறையும் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர் என அரசு வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன.

அதேபோல், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், மீதமுள்ள 92.50% இடங்களில் சேர்ந்த 8053 பேரில், 1613 பேர், அதாவது 20 விழுக்காட்டினர் மட்டுமே முதல் முயற்சியில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 6,440 பேர் குறைந்தது 2 முறை முதல் அதிகபட்சமாக 6 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களாவர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்த 2570 பேரில் 768 பேர், அதாவது 30% மட்டும் தான் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். மீதமுள்ள 70 விழுக்காட்டினர் 2 முறை முதல் 6 முறைக்கும் கூடுதலான முயற்சிகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். ஐந்தாண்டுகளுக்கு முன் 2021&22ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் முதல் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். ஆனால், படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைந்து 5% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பாண்டில் இது இன்னும் மோசமடைந்திருக்கக் கூடும்.

மருத்துவப் படிப்பு என்பதை காலத்தையும், பணத்தையும் அள்ளி அள்ளிக் கொட்டினால் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிலையை நீட் உருவாக்கியிருப்பதைத் தான் இந்த தரவுகள் காட்டுகின்றன. 17&ஆம் வயதில் 12&ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர வேண்டிய மாணவர்கள், இப்போது 20 முதல் 22 வயதில் தான் மருத்துவப் படிப்பில் சேர முடிகிறது. இதற்கு காரணம் முதல் முயற்சியில் பெற்றி பெற முடியாத மாணவர்களிடம் பணம் மட்டும் இருந்து விட்டால் தனியார் மையங்களில் சேர்ந்து சிறப்புப் பயிற்சி பெற்று மீண்டும், மீண்டும் நீட் தேர்வு எழுதுகின்றனர். மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் சராசரியாக 3 முறை நீட் எழுதியுள்ளனர்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பொதுவாக 11&ஆம் வகுப்பில் நீட் பயிற்சியை தொடங்குகின்றனர். 12&ஆம் வகுப்பை முடித்த பிறகும் 3 முறை மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்றால், குறைந்தது ஐந்தாண்டுகள் நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க வேண்டும். இது தவிர கூடுதல் பயிற்சிகளையும் மாணவர்கள் பெறுகின்றனர். இதற்கான ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவழிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, குறைந்தது இரு ஆண்டுகள் முதல் 5 அல்லது 6 ஆண்டுகள் வரை வீணடிக்க வேண்டியிருக்கும். பெரும் பணம் வைத்திருப்பதுடன், குறித்த காலத்திற்குள் படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் இல்லாதவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் பெரும் பணம் செலவு செய்து தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு தான், அவர்களுக்கு 7.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அரசு பள்ளி மாணவர்களிலேயே 95 விழுக்காட்டினர் இரு ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை கூடுதல் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதுகிறார்கள். அதாவது ஏழை மாணவர்களாக இருந்தாலும், கடன் வாங்கியாவது சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்வியை நீட் தேர்வு எந்த அளவுக்கு வணிக மயமாக்கியிருக்கிறது என்பதற்கு இதை விட மோசமான சான்றுகள் வேறு எதுவும் இருக்க முடியாது.

2010&ஆம் ஆண்டில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட போதும், 2017&ஆம் ஆண்டில் கட்டாயமாக அறிமுகம் செய்யப்பட்ட போதும், மருத்துவப் படிப்பு வணிகமயமாவதைத் தடுப்பதற்காகவும், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தான் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அந்த நோக்கங்களில் நீட் தேர்வு தோல்வியடைந்து விட்டது என்பது ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. மருத்துவக் கல்வியை மேலும் பலவீனப்படுத்துதல், மேலும், மேலும் வணிகமயமாக்குதல் ஆகிய பணிகளையே நீட் தேர்வு செய்கிறது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொருபுறம், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை நிரப்ப நடப்பாண்டில் இதுவரை 4 முறை கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகும் கூட, இன்னும் நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளன. அதற்குக் காரணம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான ஆண்டு கட்டணத்தை ரூ.29 லட்சம் வரை உயர்த்தியிருப்பது தான். மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணத்தை மட்டும் மொத்தம் ரூ. 1.58 கோடியாக உயர்த்தி விட்டு, மருத்துவக் கல்வியை வணிகமயமாக்காமல் தடுத்து வருகிறோம் என்று அரசு கூறுவது எந்த வகையிலும் நியாயமல்ல.

மருத்துவக் கல்வியை தரமானதாகவும், அனைவருக்குமானதாகவும் மாற்ற வேண்டியது அவசியமாகும். அதற்காக நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதை ரத்து செய்தல், மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை ஏழை & நடுத்தர மக்களுக்கு கட்டுபடியாகும் வகையில் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks