CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?

CM Vijay: லெஃப்ட் ரைட் வாங்கப்போகும் விஜய்! அச்சத்தில் TVK MLA-க்கள்! மீட்டிங்கில் பேசப்போவது என்ன?
News Image

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நிலையில், அடுத்தடுத்து தவெக உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இன்று சென்னையில் உள்ள பனையூரில் தலைமை அலுவலகத்தில் விஜய் நேரில் சந்திக்கிறார்.

மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெறும் இந்த சந்திப்பில் விஜய் என்னென்ன விஷயங்கள் குறித்து ஆலோசிப்பார்? என்று கீழே காணலாம்.

1. நடத்தை:

மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் பொதுவெளியிலும், பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் சாமானியர்களைக் காட்டிலும் மிகவும் கவனத்துடனும், கண்ணியத்துடனும் நடக்க வேண்டியது அவசியம். ஆனால், துணை சபாநாயகர் ரவிசங்கர் பொதுமக்கள் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்கியதும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்  பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதும் தவெக-விற்கும், தவெக ஆட்சிக்கும் களங்கத்தை உண்டாக்கியுள்ளது.

இதனால், இன்றைய சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் அனைத்து உறுப்பினர்களிடமும் காரசாரமாக தனது கண்டிப்பை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது. மேலும், மற்ற உறுப்பினர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையையும் விஜய் விடுப்பார் என்று கருதப்படுகிறது.

2. ஆட்சிக்கவிழ்ப்பு சதி:

தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா தன்னிடம் அதிமுக பிரமுகர் குதிரை பேரம் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுபோல, ஆட்சியைக் கவிழ்க்க 25 எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால், இன்றைய கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களிடமும் விஜய் இதுதொடர்பாக விரிவாக ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தவெக ஆட்சிக்கு எதிராக யாரேனும் சதி செயலில் ஈடுபட்டாலோ, அதற்கு உறுதுணையாக இருந்தாலோ அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகளை எடுப்பதற்கு மிக கடுமையான எச்சரிக்கையை விஜய் ஒவ்வொரு உறுப்பினருக்கும் விடுப்பார் என்று கருதப்படுகிறது.

3. லஞ்சப்புகார்:

லஞ்சத்திற்கு எதிராக மிக கடுமையான குரலை சட்டமன்றத் தேர்தலில் எழுப்பி ஆட்சிக்கு வந்த விஜய், யார் கேட்டாலும் லஞ்சம் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் என்று முதலமைச்சரான பிறகு திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால், விஜய்யின் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் மீது தொடர்ந்து லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்து கொண்டிருக்கிறது. இதனால், இந்த விவகாரம் குறித்தும் விஜய் இன்று அனைத்து உறுப்பினர்களிடமும் ஆவேசமாக பேசுவார் என்று கருதப்படுகிறது.

மன உளைச்சலில் விஜய்:

ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிராக தொடர்ந்து சதி நடந்து வரும் நிலையில், அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தவெக உறுப்பினர்கள் ஆட்சிக்கு நெருக்கடியையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது விஜய்க்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கியுள்ளது. இதனால், இன்றைய ஆலோசனையில் விஜய் மிகவும் கடுமையாகவே நடந்து கொள்வார் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks