சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை

சிறுமிக்கு 4 ஆண்டாக வளர்ப்பு தந்தை செய்த அக்கிரமம் !! கண்டு கொள்ளாத தாய் - வெளிவந்த உண்மை
News Image

"காணாமல் போன சிறுமி"

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் அடுத்துள்ள சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காணாமல் போனதாகக் கூறி, கடந்த 3-ம் தேதியன்று 'சைல்டு ஹெல்ப் லைன்' மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், இது குறித்து கொலக்கொம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கொலக்கொம்பை போலீசார் சிறுமியை தேடி மீட்டு உதகை குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

"பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை"

அதன் பின்னர், போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சிறுமியின் தந்தை ராமன் ( வயது 50) குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், தாயார் ராணி ( வயது 47) என்பவர் நடராஜ் ( வயது 55) என்ற நபருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பள்ளி விடுமுறையின் போது, சிறுமிக்கு அவரது வளர்ப்பு தந்தையான நடராஜ் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

"கண்டு கொள்ளாத தாய்"

கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் வளர்ப்பு தந்தை நடராஜ். ​இந்த விவகாரம் குறித்து, சிறுமி தன் தாயார் ராணியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், நடராஜ் குடும்பச் செலவுக்கு கூடுதலான பணம் கொடுத்து வந்ததாலும், தாயாருக்கு குடிபழக்கம் இருந்ததாலும் அவர் இதனை கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.

சிறுமி கூறிய புகாரின் பேரில், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பர்வீன்பானு, சிறப்பு உதவி ஆய்வாளர் வசந்தகுமாரி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரது வளர்ப்பு தந்தை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்பு தந்தை நடராஜ் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ராணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடராஜ் உதகை கிளை சிறையிலும், அவரது மனைவி ராணி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். மகள் என்றும் பாராமல் வளர்ப்பு தந்தையே இவ்வாறு நடந்து கொண்டதும் அவரது தாய் இதனை கண்டும் காணாமல் இருந்து வந்ததும் குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks