Chennai-Bengaluru highway expansion: ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் இடையேயான சாலை பணிகள் இழுபறியில் உள்ளதால், 10 கிலோ மீட்டரை கடக்கவே 90 நிமிடங்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

இழுத்தடிக்கப்படும் சென்னை - பெங்களூரு சாலை விரிவாக்கம்:

சென்னை - பெங்களூரு 6 வழிச்சாலையை விரிவாக்கும் செய்யும் பணிகள் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கியது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் தொடங்கி கரைபேட்டை வரையிலான, 34.5 கிலோ மீட்டர் வழித்தட பணிகள் இன்னும் முழுமையடையாதது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக பல கால வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டபோது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதுவரை பணிகளை முடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக திட்டமிடப்பட்ட 17 மேம்பாலங்க:, பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் 8 மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான வரும் 2027ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிவு பெறும் என, புதிய கால வரம்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

10KM-க்கு 90 நிமிடங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாம்பாக்கம் மற்றும் சிப்காட் அருகே வாகனங்கள் செல்ல ஏதுவான சுரங்க மேம்பாலங்கள் அமைப்பதற்கு வசதியாக, தற்போதுள்ள 15 மீட்டர் அகலமுள்ள சாலையானது சுமார் 3.5 கி.மீ. தூரத்திற்கு 7.5 மீட்டராக சுருக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தானது இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளுக்குத் திருப்பி விடப்படுகிறது. இதன் விளைவாக, ஸ்ரீபெரும்புதூருக்கும் சுங்குவார்சத்திரத்திற்கும் இடையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வாகனங்களுக்குச் சுமார் 60 முதல் 90 நிமிடங்கள் ஆகின்றன.

குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும்போது நிலைமை மேலும் மோசமடைகிறது. அண்மையில் தீபாவளி பண்டிகையின்போது, நவம்பர் 5 முதல் 10 வரை, சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இடையே 9 கி.மீ. வரை வாகனங்கள் வரிசையில் நின்றதோடு, நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் நீடித்தது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைத்து ஒருபுறம் பணம் வசூலிக்க தொடங்கிய பிறகும், நீடித்து வரும் கட்டுமானப் பணிகள் கடுமையான சிரமத்தை ஏற்படுத்தி வருவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: Car Accident: ஜீப் மீது மோதி அந்தரத்தில் பறந்த கார்..! தப்பித்து ஓட முயன்ற பெண் படுகாயம் - வைரல் வீடியோ

தாமதத்திற்கான காரணங்கள் என்ன?

சுங்குவார்சத்திரம் கிழக்கு மற்றும் மேற்கு, சாந்தவேலூர், சேந்தமங்கலம், ராஜகுளம், வேடல், அண்ணா புற்றுநோய் நிலையம் மற்றும் பொன்னேரிக்கரை சந்திப்புகளில் வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், சிப்காட், மாம்பாக்கம், ஏனத்தூர், மீனாட்சி மருத்துவக் கல்லூரி சந்திப்பு, பீமந்தாங்கல் மற்றும் பிற இடங்களில் நிலுவையில் உள்ள பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நேரத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே சாலைகளை மூட காவல்துறை அனுமதிப்பதால், கட்டுமானப் பணிகளின் வேகம் பாதிக்கப்பட்டுள்ளதாம்.

திட்டத்திற்கான மண் கொள்முதலில் சிறு சிக்கல்கள் இருந்ததாகவும், இரண்டு இடங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திட்டமிடப்பட்ட 34.5 கி.மீ. பணிகளில், 23.3 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன, மீதமுள்ள 11.22 கி.மீ. பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் வாலாஜாபேட்டைக்கு இடையேயான 70 கி.மீ தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை ரூ.1,187.6 கோடி செலவில் 6 வழிச்சாலையாக மாற்றும் பணி 2018-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது கவனிக்கத்தக்கது.

Source: Read Full Article