Chennai Corporatioin Road: முதற்கட்டமாக 75 கிலோ மீட்டர் நீள சாலைகளை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளதாம்.

பராமரிப்பு பணியில் சிக்கல்

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள சாலைகளின் துாய்மை பணி மற்றும் 3.20 லட்சம் தெருவிளக்குகளை மாநகராட்சி நிர்வாகமே பராமரித்து வருகிறது. வடிகால், கால்வாய், சாலை, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலங்களை அந்தந்த துறைகள் பராமரித்து வருகின்றன. ஆனால், மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சில சாலைகளின் தொடர்ச்சி நெடுஞ்சாலைத்துறையிடமும், அதேபோன்று நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள சில சாலைகளின் தொடர்ச்சி மாநகராட்சியிடமும் உள்ளன. இதனால் வடிகால் கால்வாய் கட்டமைப்பில் தொடர்ச்சி இல்லாதது, நீரோட்டம் பார்த்து சாலைகளை சீரமைக்காதது, நிர்வாக ரீதியிலான சிக்கல் என பிரச்னைகள் நிலவுகிறது.

உதாரணமாக நெடுஞ்சாலைத்துறை சாலையின் அகலத்தின் அடிப்படையில் வடிகால்களை அகலமாக அமைக்கிறது. ஆனால், மாநகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட சாலைகளில் கால்வாய்களின் அகலம் குறைவாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இரண்டும் தனித்தனி துறைகள் மற்றும் அவற்றுக்கு தனித்தனி செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதால், நிர்வாக ரீதியாக முடிவெடுப்பது மற்றும் கலந்தாலோசிப்பதில் பிரச்னை தொடர்கிறதாம்.

கைமாற்றப்பட்ட சாலைகள்:

இதனை கருத்தில் கொண்டே கடந்த 2023ம் ஆண்டு, சென்னையின் ஏழு மண்டலங்களில் நெடுஞ்சாலைத்துறை வசம் இருந்த, 35 கிலோ மீட்டர் நீளம் கொண்ட, 19 சாலைகள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. அதேபோன்று, மூன்று மண்டலங்களில், மாநகராட்சி வசமிருந்த 7.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறு பேருந்து சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. அதன் தொடர்சியாக வெள்ள பாதிப்பு, வடிகால் கட்டமைப்பு மற்றும் நிர்வாக சிக்கல்களை தீர்க்க, மாநகராட்சி வசம் உள்ள, மேலும் 100 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலைகள், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, எட்டு மண்டலங்களில் உள்ள, 75 கிலோ மீட்டர் நீளம் கொண்ட, 38 சாலைகள் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: Compact SUV: டக்கரான குட்டி கார்கள் தான் டார்கெட்டா..! அப்க்ரேட்களுடன் வரும் 3 எஸ்யுவிக்கள் - விலை, அம்சங்கள், வசதி

கைம்மாற்றப்பட்ட 75KM நீள சாலைகளின் விவரங்கள்:

மண்டலம்

சாலைகளின் பெயர்

நீளம் (கி.மீ.,)

மாதவரம்

மாதவரம் மில்க் காலனி சாலை

3.37

தண்டையார்பேட்டை

எத்திராஜ் சாமி சாலை, மாதவரம் பிரதான சாலை, பி.பி.சாலை, சத்யமூர்த்தி நகர் பிரதான சாலை, அம்பேத்கர் கல்லுாரி சாலை, மூர்த்தி நகர் தெரு. மேலப்பட்டி பொன்னப்பா தெரு, எம்.கே.பி. நகர் மேற்கு அவென்யூ சாலை, எம்.கே.பி. நகர் மத்திய அவென்யூர் சாலை, தண்டையார்பேட்டை பிரதான சாலை

14.58

ராயபுரம்

ரித்தர்டன் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை

1.10

திரு.வி.க. நகர்

மாதவரம் பிரதான சாலை, அம்பேத்கர் கல்லுாரி சாலை, மேலப்பட்டி பொன்னப்பா தெரு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, கொன்னுார் பிரதான சாலை

10.54

அண்ணா நகர்

புதிய ஆவடி சாலை, கொன்னுார் பிரதான சாலை, சென்னை - திருவள்ளூர் பிரதான சாலை, அண்ணா நகர் 3வது அவென்யூ

13.70

தேனாம்பேட்டை

சி.ஐ.டி. நகர் 1வது பிரதான சாலை, வடக்கு உஸ்மான் சாலை, 70 அடி பிரதான சாலை, மகாலிங்கபுரம் பிரதான சாலை, டேங்க் பன்ட் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, எம்.ஜி.ஆர். சாலை - ஆர்காட் சாலை

7.78

கோடம்பாக்கம்

சி.ஐ.டி., நகர் 1, 3 மற்றும் 4வது பிரதான சாலைகள், உஸ்மான் சாலை, ' வடக்கு மற்றும் தெற்கு உஸ்மான் சாலைகள், வெங்கட்நாராயண சாலை, பசுல்லா சாலை, திருமலை சாலை, பர்கிட் சாலை, துரைசாமி சாலை, பிருந்தாவன் தெரு, 2வது அவென்யூ, அம்பேத்கார் நகர் 4வது அவென்யூ, எம்.ஜி.ஆர். சாலை – ஆர்காட் சாலை, கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதுார் சாலை

18.67

வளசரவாக்கம்

கோடம்பாக்கம் - ஸ்ரீபெரும்புதுார் சாலை

5.00

அடையாறு

எ.பி. சாலை மேற்கு அவென்யூ

0.46

பராமரிப்பு பணிகள் வேகமெடுக்குமா?

சென்னையில் பெரும்பாலான சாலைகள் மாநகராட்சி வசம் உள்ளன. ஆங்காங்கே, சில தொடர்ச்சி இல்லாத சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளன. இதனால், நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து பணி செய்வதிலும், வெள்ள பாதிப்பை தடுக்கும் கட்டமைப்புகளை அமைப்பதிலும் பல்வேறு ஏற்படுகின்றன. மாநகராட்சியில் சாலை, வடிகால் பணிகளை போல், துாய்மை, சுகாதாரம், தெரு விளக்கு, ஏரி, குளங்கள், கட்டடம் போன்ற பல்வேறு பணிகள் உள்ளன.

இதற்காக ஒதுக்கப்படும் நிதியை பகிர்ந்து, நெடுஞ் சாலை சீரமைப்பு பணி செய்ய வேண்டி உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலை, மேம்பாலம், சுரங்கபாதையில் மட்டும் கவனம் செலுத்துவதால், கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கிறது. இதனால், துரிதமாக பணிகள்கள் மேற்கொள்ள, 75 கி.மீ., நீளம் கொண்ட சாலைகள் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, நிர்வாக சிக்கல் தவிர்த்து, பணிகள் தொய் வின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் சாலை

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பின் கீழ், 418.56 கிலோ மீட்டர் நீளத்திற்கான 488 பேருந்து சாலைகள் உள்ளன. இவை, 50 முதல் 150 அடி வரை அகலம் கொண்டவை ஆகும். இதேபோல், 5,653.89 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 35 ஆயிரத்து 978 எண்ணிக்கையிலான 15 முதல் 40 அடிவரை அகலம் கொண்ட உட்புற சாலைகளும் உள்ளன. கூடுதலாக மாநகராட்சி எல்லையில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில், 270 கிலோ மீட்டர் நீளம் கொண்ட, 60 சாலைகள் உள்ளன. இவை 50 முதல் 225 அடி வரை அகலம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article