இலங்கையை கம்மி விலையில் சுற்றிப்பார்க்க சூப்பர் சான்ஸ்.! இவ்வளவு தானா கப்பல் கட்டணம்?

இலங்கையை கம்மி விலையில் சுற்றிப்பார்க்க சூப்பர் சான்ஸ்.! இவ்வளவு தானா கப்பல் கட்டணம்?
News Image

இலங்கை தீவில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இதனை பார்ப்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு சுற்றுலா வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கப்பல் சேவையானது இயக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் வானிலை மாற்றம் காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்கள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் ரூ.500 கட்டணக் குறைப்பு, 30 கிலோ இலவச லக்கேஜ் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சூப்பர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

சிறப்பு சலுகைகள்

​அதாவது நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பலை சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில், கப்பல் போக்குவரத்தில் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகிகள், பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்புச் சலுகைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்புச் சலுகையாக நாகை - காங்கேசன்துறை இடையேயான ஒரு வழிப் பயணக் கட்டணத்தில் ரூ.500 குறைக்கப்பட்டதை அடுத்து ரூ.6,000 ஆக இருந்த ஒரு வழிப் பயணக் கட்டணம் தற்போது ரூ.5,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

30 கிலோ இலவச லக்கேஜ்

​அதேபோல் உடைமைகள் கொண்டு செல்வதிலும் பயணிகளுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் கட்டணமின்றி இலவசமாக எடுத்துச் செல்லும் உடைமைகளின் அளவு 10 கிலோவிலிருந்து 30 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, பயணிகள் 7 கிலோ வரையிலான கைப்பையை தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் கூடுதல் பொருட்கள் தேவைப்படுவோர், கூடுதலாக 30 கிலோ வரை கட்டணம் செலுத்தி எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் ஒரு பயணி 30 கிலோ இலவச உடைமை மற்றும் 30 கிலோ கட்டண உடைமை என மொத்தம் 60 கிலோ வரை எடுத்துச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

55,310 பயணிகள் பயணம்

​இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே 55,310 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கட்டணக் குறைப்பு மற்றும் கூடுதல் லக்கேஜ் சலுகைகள் இரு நாட்டுப் பயணிகளிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks