தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக கவலைக்குரியதாக உள்ளதாகவும் தீபாவளி நாளில் எத்தனை கொலைகள் நடந்தன என பட்டிமன்றம் நடைபெறுவதாகவும் சபாநாயகர் தாக்குதல், ஆட்சியருக்கு தொல்லை உள்ளிட்டவை தான் மாற்றமா என முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நல்லூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வெண்அங்கி அணியும் விழாவில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 384இல் இருந்து, 844ஆக அதிகரித்துள்ளதாகவும், எம்பிபிஎஸ் இடங்கள் 51000இல் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது எனவும், இது அதிக வாய்ப்புகளை மாணவ, மாணவிகளுக்கு கொடுக்கிறது என்றார்.

தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் ஏறக்குறைய தனது பணிகள் முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது எனவும், பயன்பாட்டிற்கு வந்த பிறகு உலக தரம் வாய்ந்த முழுமையான ஒரு மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும் என்றார். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் சேவை செய்த மருத்துவர்களுக்கு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உதவியை அரசு செய்து தர வேண்டும் என்றார். மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டண வசூல் குறித்த கேள்விக்கு, சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடப்பார்கள் என்றார்.

தீபாவளுக்கு கொலைக்கு பட்டிமன்றம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமான கவலைக்குரியதாக உள்ளது எனவும், தீபாவளி நாளில் 6 கொலையா, 7 கொலையா, 11 கொலையா என்று பட்டிமன்றம் நடப்பதாக சாடினார். மாற்றம் மாற்றம் என்பது, துணை சபாநாயகர் தன் வீட்டிற்கு மனு அளிக்க வந்தவரை தாக்குவதும், மாற்றி மாற்றி பேசுவது தான் மாற்றமா என வினவினார். எம்எல்ஏ ஒருவர் ஆட்சியருக்கு அளித்த தொல்லை தான் மாற்றமா என்றார். எந்த கட்சியை சார்ந்தவர்களாக, எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் பாலியல் குற்றம் என்பது மன்னிக்க முடியாத குற்றம் எனவும், பெண்கள் மீது ஏவப்படுகின்ற மிக கடுமையான தாக்குதல் எனவும், எந்த கட்சியாக இருந்தாலும் அதை அனுமதிக்க கூடாது என்றும், எந்த கட்சியாக இருந்தாலும் பாலியல் குற்றம் செய்துவிட்டு தப்பித்துவிட்டு மறுபடியும் அரசியலில் கோலோச்ச அனுமதிக்க கூடாது என்றார்.

துணை சபாநாயகர் விவகாரத்தில் சிசிடிவி பதிவுகள் வெளியிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, மாற்றி மாற்றி பேசுவதால் தான் மாற்றம் என்றார். இந்த மாற்றம் மக்களுக்கு ஏமாற்றமாக மாறி கொண்டிருக்கிறது என்றார். மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயலாற்றுவது தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது எனவும். உடனே கூட்டணி என்றல்ல எனவும், கொள்கை வேறு ஆட்சி வேறு எனவும், மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றார். மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், தனது வீட்டின் அருகிலும் 2 மணி நேரம் மின்தட்டை எனவும், அமைச்சர் நிர்மல் குமார் இதை கவனிக்க வேண்டும் என்றார்.

தம்பி, தங்கைகள் திருத்தி கொள்ள வேண்டும்

ஆட்சியில் தவறு நடந்தால் விமர்சனம் செய்யலாம், தேவையின்றி விமர்சனம் செய்ய கூடாது எனவும், வைகோ கூறுவதை எல்லாம் நம்ம நியாயமாக எடுத்து கொள்ள முடியாது எனவும், மாற்றி மாற்றி பேசுவதில் வைகோவும் ஒருவர் என்றார். திமுக 5 வருட ஆட்சி, தற்போதைய ஆறு மாத ஆட்சி, குறுகிய கால ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றார். அனுபவம் இல்லாத தம்பிகளும் தங்கைகளும் திருத்தி கொள்ள வேண்டும் என்றார். பாலியல் வன்கொடுமை, பாலியல் தொந்தரவு விவகாரங்களில் அதிகாரப்பூர்வ புகார் வரவில்லை என்றாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பெண்களுக்கு எந்த விதத்தில் பாலியல் தொந்தரவு வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 6 மாத ஆட்சி என்பது தத்தி தத்தி நடக்க ஆரம்பித்துள்ளனர் எனவும், சட்ட ஒழுங்கு சரியில்லை, குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மாற்றி, மாற்றி பேசுவது என்றார். கரண்ட் ஸ்டேட்டஸ் என்ன என்பதற்கு கரண்ட் பதில் சொல்லுது என்றார். இந்தியை அழிப்பதாக வைகோ கூறியது குறித்த கேள்விக்கு, வெளி மாநில மக்களின் நலனுக்காக வைக்கப்படுவதாக கூறினார். ஹிந்தி மொழி வேண்டாம் என்றால் துரை வைகோவை தான் கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் எனவும் இரட்டை வேடம் போட வேண்டாம் என்றார்.

பாஜகவுடன் இணைந்து திமுகவும் அதிமுகவும் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக அமைச்சர் ராஜமோகன் கூறியது குறித்து கேள்விக்கு, ராஜ்மோகன் கல்வித்துறை, நூலக துறையை கவனிக்க வேண்டும் எனவும், மற்றதை பார்க்க வேண்டாம் என்றார். ஆலயங்களில் செல்போன் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறி அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது குறித்த கேள்விக்கு, இந்த அரசாங்கம் கொடுக்குற மாற்றம், முதலில் ஒன்றை கூறி பின்னர் மாற்றி பேசி, மீண்டும் மாற்றி பேசுவது தான் மாற்றம் என்றார்.

Source: Read Full Article