"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

"செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - பெரியார் அறிவுலகத்தில் மெகா ஊழல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"
News Image

பெரியார் அறிவுலக புத்தகக்கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

எழுத்தாளர் பெருமாள் முருகன் கடும் குற்றச்சாட்டு

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலத்தை அக்.16-இல் முதலமைச்சர் விஜய் திறந்துவைத்தார். இந்நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன், பெரியார் அறிவுலக புத்தகக்கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகவும், நூலாசிரியர் பெயர்கள் பல போலியானவை எனவும், குறிப்பிட்ட பதிப்பகத்தின் பெயரில் ஏராளமான போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் ஆனால் அப்படி ஒரு பதிப்பகமே இல்லையெனவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

"புத்தகக்கொள்முதலில் ஊழல் - கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"

சென்னையில் நடைபெற்ற தொழில் முனைவோருக்குக்கான வங்கி இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜ்மோகன், மக்கள் வரிப்பணத்தில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்ட நிலையில் ஏதோ தங்கள் சொந்தப்பணத்தில் கட்டியதுபோல் திமுகவினர் பெருமை பேசுவதாக விமர்சித்தார். மேலும் பெரியாரை கொள்கை தலைவராக கூறிக்கொள்ளும் திமுக, அவரது பெயரிலான அறிவுலகத்திலேயே ஊழல் செய்துள்ளதாகவும், ஊழல் செய்வதற்காகவே போலி பதிப்பகத்தின் பெயரில் புத்தகங்களை வாங்கியதாகவும் அப்படியொரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லையெனவும், திமுகவின் மெகா ஊழலுக்கு இது ஒரு சான்று எனவும் விமர்சித்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks