புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் அரிசிக்குப் பதிலாக வழங்கப்படும் ரொக்க உதவித்தொகையின் கீழ், மார்ச் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 6 மாதங்களுக்கான ரூ.122.91 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.860 வீதம் ரூ.5,160-ம், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.430 வீதம் ரூ.2,580-ம் ஆறு மாதங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.'

ரேஷன் அரிசிக்குப் பதிலாக ரொக்க உதவித்தொகை

புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்குப் பதிலாக ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான 6 மாதங்களுக்கான உதவித்தொகையாக மொத்தம் ரூ.122.91 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசிக்குப் பதிலாக, அதற்குரிய பண மதிப்பை நேரடி பயனாளர் பணப் பரிமாற்றத் திட்டத்தின் (DBT) மூலம் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிவப்பு, மஞ்சள் அட்டைகளுக்கு தனித்தனியாக தொகை

இத்திட்டத்தின்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள BPL AAY/PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசிக்குப் பதிலாக ரூ.860 வழங்கப்படுகிறது.

அதேபோல், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள APL Non-PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ அரிசிக்குப் பதிலாக ரூ.430 ரொக்க உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.860-ம், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.430-ம் அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

6 மாதங்களுக்கு ரூ.122.91 கோடி ஒதுக்கீடு

முதலமைச்சர் என். ரங்கசாமியின் உத்தரவின்படியும், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் வி.பி. சிவக்கொழுந்துவின் வழிகாட்டுதல் மற்றும் தொடர் கண்காணிப்பின்படியும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மார்ச் 2026 முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான ஆறு மாதங்களுக்கான அரிசிக்கான ரொக்க உதவித்தொகையாக மொத்தம் ரூ.122.91 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொகை தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடி பயனாளர் பணப் பரிமாற்றத் திட்டத்தின் (DBT) மூலம் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Source: Read Full Article