மாமா ஏன்? விஜய்யை 'மச்சான்' என்று கூட அழைக்கலாம் - திருநாவுக்கரசர் அதிரடி பேச்சு

மாமா ஏன்? விஜய்யை 'மச்சான்' என்று கூட அழைக்கலாம் - திருநாவுக்கரசர் அதிரடி பேச்சு
News Image

நேருவை மாமா என்று அழைத்தவர்கள் இன்று விஜயை மாமா என்று அழைக்கிறார்கள், ஏன் மச்சான் என்று கூட அழைக்கலாம். இதனால் நேருவின் புகழ் குறைந்து விடுமா? என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை சத்யமூர்த்தி பவனில் உள்ள நேருவின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவபடத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பூ தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “இந்திய நாட்டின் முதல் பிரதமராக உலக தலைவர்கள் வரிசையில் ஒருவராக இந்திய திருநாட்டை பெருமை படுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளில் அவரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினோம். இந்திய நாடு சுதந்திரம் பெற்றபோது குண்டூசி கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது, உணவு பற்றாக்குறை இருந்தது. பள்ளிகள், அணை கட்டுகள், தொழிற்சாலைகள் இவைதான் நான் வணங்கும் ஆலயங்கள் என்று சொன்னவர். உலக அளவில் இந்தியாவை உயர்த்தியவர்.

மார்க் போடக் கூடாது

விஜய் தலைமையில் இயங்கும் கூட்டணி அரசு மிக சிறப்பாகவே செயல்பட்டு கொண்டுள்ளது. 6 மாத ஆட்சியை வைத்து ஒரு ஆட்சியின் திறனுக்கு மார்க் போட முடியாது போடவும் கூடாது. மக்கள் தேர்ந்தெடுத்தது 5 ஆண்டுகளுக்கு சில சிறிய பெரிய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். மின்சாரத்தை ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ய முடியாது. இந்த ஆண்டுக்கு எவ்வளவு தேவை என்று தொலைநோக்கு திட்டத்தோடு செயல்பட வேண்டும் 4 ஆண்டுகள் கழித்து பற்றாக்குறை இருந்தால் கேட்கலாம். ஆட்சிக்கு வந்த உடன் மின்பற்றாக்குறை இருந்தால் வெளியில் தான் வாங்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அங்கும் இங்கும் நடக்கும் சில விஷயங்களை அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஒரு சில விஷயங்களை வைத்து கொண்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்வது அவசர கோலத்தில் பேசப்படுபவை. குற்றச்சாட்டுக்கு ஆட்படுத்தப்படுபவர் யாராக இருந்தாலும் சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதான். வதந்திகள் பல, உயிருடன் இருப்பவரை இறந்ததாக ஊடகங்களில் வெளியாகி இரங்கல் கூட தெரிவிக்கிறோம். வரும் செய்திகள் உண்மையாக இருந்தால் சந்தோஷம் உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கையை விஜய் எடுக்க வேண்டும் எடுப்பார் என்று நினைக்கிறோம்.

சம்பந்தப்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர், மற்றொருவர் ஆட்சியர். சட்டமன்ற உறுப்பினர் அதை மறுக்கிறார். நான் செய்யவில்லை ஆதாரம் காட்டுங்கள் என்றார். ஆட்சியரும் இதுவரை ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. அதிகாரபூர்வமாக ஆட்சியர் கணவர் மனு அளித்து இருந்தால் ஊடகத்தில் வந்து இருக்கும். முதலமைச்சர் விசாரித்து கொண்டு இருப்பார் உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது

விஜயை மச்சான் என்று கூட அழைக்கலாம்

நேரு இருக்கும் போது மாமா என்றார்கள். இன்று இருக்கும் முதலமைச்சரும் குழந்தைகளை நேசிக்கிறார்கள் மாமா என்று அழைக்கிறார்கள். ஏன் மச்சா என்றுக்கூட அழைக்கட்டும். காவிரி நதி நீர் பிரச்சினை மேகதாது அணை பிரச்சினை விஜய் ஆட்சிக்கு வந்த பின் ஏற்பட்ட புதிய பிரச்சினை இல்லை. யார் முதலமைச்சராக கர்நாடகாவில் இருந்தாலும் பாஜக முதலமைச்சர் இருந்தபோதும் அணை கட்டுவோம் என்று தான் சொன்னார்கள். அதேபோல், தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அணை கட்டக்கூடாது என்று தான் சொல்வார்கள். அணை கட்ட வேண்டும் என்றால் உடனே கட்டி விட முடியாது. இது கட்சி சம்பந்தபட்ட பிரச்சினை இல்லை.தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அணை கட்டக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு. காங்கிரஸ் முதலமைச்சர் என்பதால் அணை கட்டுங்கள் என்று நாங்கள் சொல்லப்போவதில்லை.

முள்ளிவாய்க்கால் பிரச்சினை எப்போதும் நடந்தது அது சம்பந்தப்படாதவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் உதவி செய்துள்ளது. தமிழ்நாடு அவ்வளவு சுலபம் இல்லை என்று ராஜீவ் காந்தி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். முறையாக நடந்த தேர்தலில் பிரபாகரன் நிற்கவில்லை இது தொடர்பாக பல வரலாறு உள்ளது. ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் உள்ளது. காங்கிரஸ் கொன்றதாக பேசுவது அர்த்தமில்லாதது” என்று பேசினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks