தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களில் உள்ள நிலையில் கடைவீதிகளில் ஜவுளி பொருட்களை வாங்க ஆர்வம் காட்டாத மக்கள் வெறிச்சோடி காணப்படும் கடை வீதிகள்.

மாசி வீதிகளில் கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிப்பு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகள், வெளிவீதிகள், ஆவணி மூல விதிகள், விளக்குத்தூண், காமராஜர் சாலை, அண்ணா நகர், பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் வருகை தருகின்றனர். தீபாவளிக்கு 2 நாட்களே உள்ள நிலையில் ஜவுளி பொருட்களை வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இதனிடையே மதுரை மாநகர் பகுதியில் திடீரென பெய்த கனமழை காரணமாக பஜார் பகுதி முழுவதிலும் மழை நீர் தேங்கியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி சாலையோரமாக அமைக்கப்பட்ட கடைகளுக்குள் மழை நீர் புகுந்து வியாபாரிகள் அவதியடைந்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகர காவல் துறை சார்பில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர். பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒலிப்பெருக்கி மூலமாக தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேசிய சாலையோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு விட வியாபாரம் குறைவாக இருப்பதாகவும். மழை பெய்து வருவதால் சாலையோரம் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் மூலமாக பொருட்களை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி வருவதால் தற்போது சாலையாறு வியாபாரிகளுக்கு, வியாபாரம் இல்லாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Source: Read Full Article