அமெரிக்காவின் இடைக்காலத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடும் பின்னடைவை சந்தித்துள்ள குடியரசுக்கட்சி

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 உறுப்பினர் இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த இடைக்காலத்தேர்தலுக்கு முன்பாக 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு 47 இடங்கள் இருந்தன. மேலும் பிரதிநிதிகள் அவையிலும் பெரும்பான்மையுடான் இருந்த ட்ரம்பின் குடியரசுக்கட்சிக்கு தற்போதைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் கடும் பின்னடைவு ஏற்பட்டு, ஜனநாயக கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அதிபராக உள்ள ட்ரம்ப் பதவி விலக நேரிடுமா என்றால் இல்லை. இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி வென்றாலும் ட்ரம்ப் அதிபராகவே தொடர்வார். ஏனெனில் அமெரிக்காவை பொறுத்த வரையில் அதிபருக்கான தேர்தல்வேறு, உறுப்பினர்களுக்கான தேர்தல் வேறு. 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபருக்கான தேர்தல்வரை அப்பதவியில் ட்ரம்பே தொடர்வார். ஆனால் அவையில் கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.

இடைக்காலத்தேர்தல் முடிவுகள் அதிபர் தேர்தலில் எதிரொலிக்குமா?

இடைக்காலத்தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக்கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இது 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலின் முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.இத்தேர்தல் முடிவுகளை கொண்டே இரு கட்சிகளும் அதிபர் தேர்தலுக்கான திட்டமிடலையும், வியூகத்தையும் வகுக்க இயக்கும்.இந்நிலையில் அமெரிக்க சட்டப்படி ஒருவர் இருமுறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியுமென்பதால் அடுத்த அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு பதிலாக வேறு ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article