" கிராம நத்தம் நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி "ஆன்லைன் பத்திரப் பதிவில் ஏற்பட்ட சிக்கல்

" கிராம நத்தம் நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி "ஆன்லைன் பத்திரப் பதிவில் ஏற்பட்ட சிக்கல்
News Image

"ஆன்லைன் முறையில் பதிவு செய்ய முடியவில்லை"

தமிழகத்தில் கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா பெறப்பட்ட நிலையில், அந்த நிலங்களை வாங்குவோர், அதில் குடியிருப்புகள் கட்டுகின்றனர். அதில் வீடு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கான விற்பனை பத்திரங்கள், நேரில் சென்று பதிவு செய்யும் போது பெரிதாக பிரச்சனை எழவில்லை.

தற்போது, புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்கள், ‘ஆன்லைன்’ முறையில் பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக, நேரடி வருகையில்லா முறையில், இந்த பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், நத்தம் நிலங்களின் சர்வே எண்கள், பதிவுத் துறை இணையதளத்தில் வருவதில்லை.

இதனால், இது தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல், மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனங்களிடம் பணம் செலுத்தியவர்கள், அதற்கான பத்திரத்தை பதிவு செய்ய முடியாமல் இருக்கின்றனர்.

இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;

தமிழகத்தில் நத்தம் நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா, நில வரைபடம் போன்ற விபரங்கள், வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இதில் பல இடங்களில் நத்தம் நிலங்களுக்கான சர்வே எண்கள், வழக்கமான பட்டா நிலங்களின் சர்வே எண்கள் வரிசையில் வரவில்லை.

இதை ஒருங்கிணைத்து, புதிய எண்கள் கொடுத்து, அனைத்து பட்டா நிலங்களும் ஒரே வரிசையில் வரும் வகையில், சர்வே எண்களை முறைப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதற்கான பணிகள் முறையாக நடக்கவில்லை. இந்த சர்வே எண்கள் ஒருங்கிணைப்பு பணிகளை, வருவாய் துறை முடித்தால் தான், அது ‘தமிழ் நிலம்’ இணையதளத்தில் வரும். அப்போது தான் பத்திரப் பதிவு மேற்கொள்ள முடியும். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என இவ்வாறு அவர் கூறினார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks