‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?

‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
News Image

சீனாவில் செயல்படுவதுபோல, வணிக வளாக கட்டடங்கள் வழியாக மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ரூ.466 கோடியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் ரூ.446.88 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட சொத்து மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையை ஒட்டியுள்ள திறந்தவெளி நிலப்பகுதிகளில் வணிக மற்றும் சொத்து மேம்பாட்டுக் கட்டடங்களைக் கட்டுவதற்கான இந்த ஒப்பந்தம், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் தொடங்கிய நாளிலிருந்து 24 மாதங்களுக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

பிரம்மாண்ட கட்டமைப்பு: 3.85 ஏக்கர் பரப்பளவில் அமையும் இத்திட்டத்தில், வழித்தடம் 5-ல் அமைந்துள்ள திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் இருபுறங்களிலும் நான்கு கட்டடக் கோபுரங்கள் (A, B, C, D) கட்டப்பட உள்ளன.

தளங்களின் விவரம்:

A மற்றும் C கோபுரங்கள்: மூன்று அடித்தளங்கள் (Basements), தரைத்தளம் மற்றும் 9 தளங்கள்.

B கோபுரம்: தரைத்தளம் மற்றும் 9 தளங்கள்.

D கோபுரம்: தரைத்தளம் மற்றும் 2 தளங்கள்.

தடையற்ற போக்குவரத்து இணைப்பு: திருமங்கலம் மெட்ரோ நிலையம், B மற்றும் C கட்டடக் கோபுரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த வடிவமைப்புடன் உருவாக்கப்படும் இத்திட்டத்தின் மூலம், ஒரே வளாகத்திற்குள் பயணிகள் மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை எளிதில் அணுகும் வகையில் தடையற்ற இணைப்பு ஏற்படுத்தப்படும்.

பணிகளின் விவரம்: கட்டுமானப் பணிகள், கட்டடக்கலை வடிவமைப்பு, உள் அலங்காரப் பணிகள், குழாய் அமைப்பு (Plumbing), மின் மற்றும் இயந்திரவியல் பணிகள், குளிரூட்டும் மற்றும் காற்றோட்ட வசதிகள் (HVAC) மற்றும் மின்தூக்கிகள் (Lifts) உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆஷிஷ் சாட்டர்ஜி முன்னிலையில், சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் மற்றும் ஒப்பந்ததாரர் நிறுவனத்தின் உதவி துணைத் தலைவர் ராஜு பன்சோடே ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தியாவிலேயே முதல் முறையாக வணிக வளாகத்திற்குள் மெட்ரோ ரயில்கள் நேராக செல்லும் வகையில் செயல்படுத்தப்படும் இந்த பிரம்மாண்ட திட்டத்தை சென்னை பயணிகள் மிகவும் எதிர்நோக்கியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks