தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தர வேண்டி புனித மெக்காவில் பிராத்தனை செய்த தவெக எம்எல்ஏ முஸ்தபா.

முஸ்தபா புனித மெக்காவிற்கு உம்ரா பயணம்

மதுரை மத்திய தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் மதார் பதுருதான்(எ) முஸ்தபா புனித மெக்காவிற்கு உம்ரா பயணம் சென்றுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் வெற்றி தளபதி விஜய் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்து சிறப்பான ஆட்சியை நடத்த வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளார்.

புனித மெக்காவில் இருந்து வீடியோ வெளியிட்ட எம்எல்ஏ மதார் பதாருதீன்,

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் நல்லதொரு ஆட்சியை வழங்கி வரும் முதலமைச்சர் விஜய், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி, இன்னும் பல ஆண்டுகள் பல நூறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துகொள்வதாகவும், மேலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களுக்காக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்க்கு ஆரோக்கியமும் மன அமைதியும் கிடைத்து, மக்களுக்கான பணிகளை சிறப்பாக ஆற்றிட ஏக இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும், ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும் எனவும் பேசியுள்ளார்

Source: Read Full Article