வண்ண, வண்ண நிறங்களால் ஜொலிக்கும் தூங்கமாநகரம் - தீபாவளி கொண்டாட்டமாக மதுரை மாநகர் பகுதியில் மக்கள் ஒரே நேரத்தில் வானவேடிக்கை பட்டாசுகளை வெடித்து வரும் நிலையில் வானம் முழுவதும் வர்ணாஜாலமாக காட்சியளிக்கிறது.

உற்சாகமாகக் பட்டாசுகளை, வெடித்து தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை மதுரை மக்கள் காலை முதலே உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது இரவு நேரத்தில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் உற்சாகமாகக் பட்டாசுகளை, வெடித்து தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புஷ்வாணம், சங்கு சக்கரம், மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வானில் சீறிப்பாய்ந்த ராக்கெட் பட்டாசுகள் வண்ண வண்ண ஒளிகளைச் சிதறடித்து கண்கவர் காட்சிகளை ஏற்படுத்தி வருகிறது. மதுரை மாநகர் முழுவதும் பட்டாசுச் சத்தம் முழங்க, வண்ணமயமான ஒளிகளால் இரவு வானமே ஜொலித்து வருகிறது.

ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாநகர் பகுதிகளில் வான வேடிக்கை நிகழ்த்துவதை வைகை ஆற்று பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீடுகளின் முன்பாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்களுக்கு இடையூறை அச்சுறுத்தை வகையிலும் பட்டாசுகளை வெடிப்பவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர் பகுதி முழுவதிலும் ஒரே நேரத்தில் பொது மக்கள் வான வெடிக்கைகளை வெடித்த நிலையில் வானம் முழுவதிலும் வர்ண ஜாலத்தில் ஜொலித்து வருகிறது
ஒரே நேரத்தில் பட்டாசுகள் பிடிக்கப்பட்டு வருவதால் மாநகர் பகுதிகளில் அதிகளவிற்கு புகைமாசு ஏற்பட்டு புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது.

Source: Read Full Article