தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!

தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!
News Image

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தீபாவளி தினமான இன்று அதிகாலை முதலே சென்னையில் பரவலாக மழை பெய்தது.

சென்னையில் மழை

சென்னையில் போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், பூந்தமல்லி, நந்தனம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை பெரம்பூர், மூலக்கடை, மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. அதிகாலை 3 மணி முதல் தொடங்கிய மிதமான மழை, காலை 6 மணிக்குப் பிறகு தீவிரமடைந்து கனமழையாக பெய்தது.

இதையும் படிங்க: Gold Rate Today: தீபாவளி அதுவுமாக நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததா தங்கம்? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா?

சுரங்கபாதையில் மழைநீர்

இதன் காரணமாக வடசென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது. குறிப்பாக பெரம்பூர் பகுதியில் உள்ள ஜீவா மற்றும் ஜமாலியா சுரங்கப்பாதை ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தீபாவளி பண்டிகை நாளான இன்று பொதுமக்கள் புத்தாடைகள் வாங்கவும், உறவினர்களை சந்திக்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் வெளியே செல்லும் நிலையில், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவது  பெரும் இடையூறாக அமைந்துள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும், மழைநீரை அகற்றுவதற்காக மோட்டார் இயந்திரங்கள் இருந்தும், அவற்றை முறையாகவும் விரைவாகவும் செயல்படுத்தி நீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக களத்தில் இறங்கி  ஜீவா மற்றும் ஜமாலியா சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் விரைந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் அதிகாலை முதலே மழை பெய்ததால் பட்டாசு வியாபாரம் மந்தமானால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks