கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் இந்த மாவட்டத்தை விட்டு போக வேண்டிய நிலை வந்தால் ஒரு பிரளயமே வெடிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் எச்சரிக்கை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கண்டித்தும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வரும் தமிழக அரசையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் கண்டித்தும் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகையில் தேர்தல் நேரத்தில் அந்த அண்ணன் என்ற மந்திர சொல்லை ஓட்டு வாங்குவதற்காக தந்திர சொல்லாக மாற்றி விட்டு இன்று பெண்கள் பரிதவித்துக் கொண்டிருப்பதை மௌனமாக பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாஜக சார்பில் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும்,

பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பேன் என சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் கள்ளக்குறிச்சி விவகாரம் தீ போல் பரவி வரும் நிலையில் முதலமைச்சர் இது தொடர்பாக வாய் திறக்காத நிலையில் இந்த மெசேஜ்க்கு என்ன பதில் என்று தெரியவில்லை, பெண்கள் மீது மரியாதை வைத்திருக்கும் நபராக முதலமைச்சர் இருந்திருந்தால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை அழைத்து கண்டித்திருக்க வேண்டும், கட்சியிலிருந்து நீக்கி இருக்க வேண்டும் இவ்வாறு செய்திருந்தால் நீங்கள் மக்களுக்கான முதலமைச்சர், பெண்களுக்கான அண்ணனாக இருந்திருப்பீர்கள், ஆனால் அவர் இவ்வாறு செய்யாமல் எல்லா தவறையும் நீங்கள் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற அடிப்படையில் எல்லா தவறிற்கும் நீங்கள் சம்மதம் தெரிவிக்கின்றீர்களா? என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பினார்....

உங்கள் ப்ரோக்கள் செய்கின்ற புரோக்கர் வேலைகளை நீங்கள் சம்மதிக்கின்றீர்களா என முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்றும், தமிழகத்தில் நான்கு இடைத்தேர்தல்கள் இன்னும் வர இருக்கிறது. முதலமைச்சர் உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசம் மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுத்து உண்மையான அண்ணன் என்பதை நீங்கள் நிரூபிப்பதாக இருந்தால் கட்சியிலிருந்து நீக்கி சட்டமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்து இந்த கள்ளக்குறிச்சியிலும் இடைத்தேர்தல் வந்தாலும் பரவாயில்லை முதலமைச்சரே, இன்றும் உங்கள் ஆட்சியை பாதுகாப்பதற்கு இடைத்தேர்தல் வர வைக்கும் நீங்கள் பெண்களை பாதுகாப்பதற்கு கள்ளக்குறிச்சியிலும் இடைத்தேர்தல் வந்தாலும் வரட்டும் என நான் சொல்கின்றேன் என்றும்,பழனியில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எஸ்.ஐ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரி தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக காவல் துறை எஸ்.ஐ நீக்கிய நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினரை நீக்க மறுக்கின்றீர்கள் என்றால், நீங்கள் தவறான நடவடிக்கைக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள் முதல்வரே என்றும், இத்தகைய நடவடிக்கைக்கு முதலமைச்சரை பாஜக சார்பில் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் தான் ரீல்ஸ் போடுகின்றார்கள் என்றால், அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக அல்லாதவர்களாக அவர்களின் கூட்டணி கட்சியினர் இருந்து வருவதாகவும், சிறுத்தை ஒன்று சென்று புலியுடன் ரீல்ஸ் போட்டது, சிறுத்தை ஊட்டிக்கு போய் புலியுடன் ரீல்ஸ் போடுவது, முதலமைச்சர் கேட்பார் என்பதற்காக சிறுத்தையும் சென்று புலியுடன் ரீலீஸ் போடுகிறது என்றும், அமைச்சர் காந்திராஜ் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போடுகின்றார், கடந்த ஆட்சியில் யார் இந்த சார் என்று கேட்டுக் கொண்டிருந்தோம், தற்போது எங்கே அந்த எஃப் ஐ ஆர் என்று கேட்க வேண்டி இருக்கிறது.

எந்த மாற்றமும் இல்லை என்றும், துறையை சரியாக பார்த்தால் முதலமைச்சர் பாராட்ட மாட்டார், ஆனால் ரீல்ஸ் சரியாக போட்டால் முதலமைச்சர் அழைத்து பாராட்டுவார் என்றும், இந்த ஆட்சியில் இன்ஸ்டன்ட் ஆக எதுவும் நடக்கவில்லை, இன்ஸ்டாவில் தான் எல்லாம் நடக்கிறது என்றும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் இறங்கியுள்ளது கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுப்பதாக நான் கேள்விப்படுகின்றேன், ஆனால் இந்த கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்தால் கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் இந்த மாவட்டத்தை விட்டு போக வேண்டிய நிலை வந்தால் ஒரு பிரளயமே வெடிக்கும் என்றும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் ஆசிரியர் ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் மற்றும் காந்திராஜ் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்த விவகாரம் என அத்தனைக்கும் முதலமைச்சர் விஜய் மௌனமாக இருக்கின்றார், இந்த மௌனம் அபாயகரமானது என நேற்று அவர் எழுதியிருந்த நிலையில் இன்று அவரது சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது என்றால் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

எல்லாத்திற்கும் மேலே கூட்டணிக் கட்சிகள் கூலி கும்பிடு போடும் நிகழ்வுகள் அதிகமாகிவிட்டதாகவும், கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியபோது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம் என மாணிக்கம் தாகூர் பதில் அளிக்கின்றார்... ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக பெண்களின் மானத்தை அடகு வைக்கும் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது என்றும், மேகதாது விவகாரத்தில் டெல்டா மக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் இருந்து கொண்டிருக்கிறது, ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்கின்றார். புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்று கர்நாடக முதல்வர் சிவக்குமாருடன் பேசி சிரிக்கின்றார்களே, முதல்வரே காவிரியில் தண்ணீரை பெற்று தர முடியவில்லை என தமிழகம் சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருக்கிறது, முதலமைச்சர் அவர்களே டெல்டா விவசாயிகள் கண்ணீர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்...

தொடர்ந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வரும் தமிழ்நாடு அரசையும் தமிழ்நாடு முதலமைச்சரையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

Source: Read Full Article