கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? - அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: தமிழக அரசு எதையோ மறைக்கிறதா? - அண்ணாமலை கேள்வி
News Image

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைப்பதாக வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்தாரா, முதல்வர் அலுவலகத்திற்குப் புகார் சென்றதா, முதல்வர் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து எச்சரித்தாரா என்பவை பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையா, இல்லையா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்தச் சூழலில், மறைந்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணின் புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்று நினைவுக்கு வருகிறது. இதே குற்றச்சாட்டு, ஒரு சாமானியக் குடிமகன் மீது எழுந்திருந்தால், இந்த அரசாங்கம் இதே அளவு பொறுமையுடன், புகார் வந்ததா, வரவில்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்குமா?  ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா?

தமிழகத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், அதைச் செயலிலும் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாகத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் தமிழக அரசியலில் பெரிய புயலை கிளப்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் முதல் கூட்டணி கட்சிகள் வரை  இந்த விவகாரத்தில் தவெகவை நோக்கி கேள்வி எழுப்பி வருகிறது. நேற்று நடைபெற்ற தவெக எம்எல்ஏ கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை முதலமைச்சர் விஜய் எச்சரித்து அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் டிஜிபியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks