நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. 22 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியை வென்றதன் மூலம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் இந்திய இரு போட்டிகளிலும்,நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலும் வென்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டி மழைக்காரணமாக ரத்தானது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் களம் கண்டனர்.

பேரதிர்ச்சி அளித்த இந்திய பேட்ஸ்மென்கள்

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்களிலும், ருதுராஜ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தனர்.தொடர்ந்து களமிறங்கியா விராட் கோலி 5 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 22 ரன்கள் என அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதையடுத்து ஏறத்தாழ அணியின் தோல்வி என உறுதி என நம்பிக்கை இழக்கும் தருவாயில் அக்சர் படேல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் தலா 46 ரன்களை குவித்து அணியின் ரன்னை உயர்த்தினர். இதனையடுத்து 42.1 ஓவார் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

சொற்ப ரன்னில் சுருண்ட நியூசி.அணி

இதனையடுத்து 210 என்ற எளிமையான இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான வில் யங் 22 ரன்களிலும், டிம் சீபெர்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, டீன் ஃபாக்ஸ் கிராப்ட் எடுத்த 31 ரன்களே அதிகபட்ச ரன்களானது. இறுதியாக 48.1 ஓவர் முடிவில் 187 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தொடரை இந்தியாவிடம் பறிகொடுத்தது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும், அக்சர் படேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Source: Read Full Article