மூன்று நாள் அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது சில நாட்களுக்கு முன்னர் தமிழக சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மத்திய உள்துறை கேட்ட அறிக்கையை ஆளுநர் அமித் ஷாவிடம் கொடுத்து, தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் தீபாவளி நாளில் மட்டும் ஒரே நாளில் 11 கொலைகள் நடைபெற்றதாக திமுக, அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் குற்றஞ்சாட்டியிருந்தன. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பிற குற்றங்கள் குறித்தும் ஆளுநரிடம் மத்திய உள்துறை அறிக்கை கேட்டிருந்தது. இந்த அறிக்கையை தர தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் அர்லேக்கர் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்தும் அதனை காவல்துறை கையாளும் விதம் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளதாக கூறப்படுறது.

ஆட்சி கலைப்பு அஸ்திரத்தை எடுக்கும் பாஜக ?

சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி இந்தியாவில் பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. ஏன், திமுக ஆட்சியே கலைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பாஜகவை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தியிருக்கும் முதல்வர் விஜயின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதை பாஜக விரும்பவில்லை. அதோடு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் விஜய் ஆட்சியை அகற்ற வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில்தான் தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கையை கேட்டிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த அறிக்கையை வைத்து விஜய் அரசுக்கு சிக்கல் கொடுக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றன.

மக்கள் கோபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்

ஒருவேளை அப்படி ஒரு முடிவை மத்திய பாஜக அரசு எடுத்து முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை கலைத்தால், தமிழக மக்களின் கோபம் மிகப்பெரிய அளவில் பாஜகவிற்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் மாறிவிடும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், உடனடியாக தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்கும் முடிவில் மத்திய பாஜக இறங்காது. ஆனால், விஜய் அரசு தொடர்ச்சியாக ஆளுநரை வைத்து குடைச்சல் கொடுக்கும் திட்டத்தை படிப்படியாக இதன்பிறகு செயல்படுத்தும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

Source: Read Full Article