வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் திருவள்ளுர் மாவட்ட மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என திருவள்ளூர் ஆட்சியர் கவிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் உருவாக வாய்ப்புள்ளதால் திருவள்ளுர் மாவட்ட மீனவர்கள் 13-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என திருவள்ளூர் ஆட்சியர் கவிதா அறிவுறுத்தியுள்ளார்.

மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக கரைகளில் வைக்கவும், கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் இன்றிரவுக்குள் கரை திரும்பவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மீனவர்கள் அனைவரும் வானிலை எச்சரிக்கைகளையும், மீன்வளத்துறை அறிவுறுத்தல்களையும் தவறாமல் பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த முறை வந்த ‘முரசு’ புயல் எதிரொலியால் கடலில் மீன் பிடிக்கச் சென்ற காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில், சிலரது உடல்கள் ஆந்திர கடற்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புயல் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இரண்டு நாட்களில் வலுவடையும் என்றும் 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக வரும் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article