நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?

நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற தமிழகத்தின் 4 கடற்கரைகள் எவை தெரியுமா? - அங்கீகாரம் வழங்கப்படுவதற்கான தகுதி என்ன?
News Image

கடலூரில் உள்ள வெள்ளி கடற்கரை, நாகை மாவட்டத்திலுள்ள காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் ஆகிய 3 கடற்கரைகளுக்கு முதல்முறையாகவும், கோவளம் கடற்கரைக்கு 6-வது முறையாகவும் நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீலக்கொடி அங்கீகாரம் என்றால் என்ன?

நீலக்கொடி அங்கீகாரம் என்பது டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சர்வதேச அளவிலான தரச்சான்று ஆகும். இந்த அங்கீகாரம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில் அமைந்துள்ளது.

ஒரே நேரத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம்!

உலக அளவில் கடற்கரைகளுக்கான மிக உயரிய தரச்சான்றாகக் கருதப்படும் இந்த நீலக்கொடி அங்கீகாரத்திற்காக, ஒரு கடற்கரை சுமார் 33 அடிப்படைக் கட்டமைப்பு விதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் நான்கு கடற்கரைகளுக்கு ஒரே நேரத்தில் நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள வெள்ளி கடற்கரை, நாகை மாவட்டத்திலுள்ள காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் ஆகிய 3 கடற்கரைகள் முதல்முறையாக நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்றுள்ளன. மேலும், புகழ்பெற்ற கோவளம் கடற்கரையில்  சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் தூய்மை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டதன் மூலம் 6-வது முறையாக நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஒரே நேரத்தில் நான்கு கடற்கரைகளுக்கு சர்வதேச தரத்திலான அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக இக்கடற்கரைகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதோடு, தமிழக கடற்கரைகள் பிற மாநில மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks