சில நாட்களாக வாட்ஸப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் ஒரு போலியான செய்தி பரவி வந்துள்ளது. வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பிறகு தற்போது பயன்பாட்டில் இருக்கும் செக் புக் அனைத்தும் செல்லாமல் போய்விடும் என்றும், அதற்கு பதிலாக 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய செக் புக்கை ஆர்பிஐ அறிமுகம் செய்ய இருக்கிறது என்றும் அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.

இந்த செய்தி உண்மையிலேயே பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ஆர்பிஐ இதற்கு உடனடியாக பதில் அளித்து. அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோசியல் மீடியா தளங்களில் பரவும் மெசேஜில், தற்போது புழக்கத்தில் இருக்கும் செக் புக் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துவிடும் என்றும், அவற்றுக்கு பதிலாக புதிய செக் புக் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மெசேஜில், 50,000 வரையிலான பரிவர்த்தனைக்கு நீங்கள் இதுவரையில் பயன்படுத்தும் செக் புக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் ரூ.50,000-த்திற்கு பிறகு எவ்வளவு தொகையாக இருந்தாலும் அதற்கு புதிய ஆல்பா நியூமரிக் குறியீடு கொண்ட செக் புக்கை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் செக் புக் விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடக தளங்களில் பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் போலியானது. இது போன்ற எந்த ஒரு அறிவிப்பையும் ஆர்பிஐ வெளியிடவில்லை.

எனவே வழக்கம்போல தொடர்ந்து பழைய செக் புக்கை பயன்படுத்தலாம். வங்கி விதிமுறைகள், செக் புக் விதிகள் மற்றும் நிதி சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும் சரி அல்லது அறிவிப்பாக இருந்தாலும் சரி அவற்றை சமூக ஊடக தளங்களின் மூலம் தெரிந்து கொள்வதற்கு பதிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தால் மட்டுமே தகவல்களை நம்பலாம். மேலும் வங்கி விதிமுறைகள் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை தெரிந்து கொள்ள ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரி பார்க்கலாம் அல்லது வங்கியின் மூலம் அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.

Source: Read Full Article