தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இறைச்சி கடைகளில் நிரம்பி வழியும் பொதுமக்கள் கூட்டம்.

Diwali 2026 ; தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில் ஒரு புறம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிலையில் மறுபுறம் அசைவ உணவு சமைப்பதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகாலை முதலே குவிந்துவருகின்றனர். மதுரை நெல்பேட்டை, பழங்காநத்தம், நேதாஜி சாலை, செக்கானூரணி, மேலூர் திருமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆடு, கோழி இறைச்சிகளை வாங்கிவருகின்றனர். தீபாவளி அன்று இறைச்சி முக்கிய இடம் பிடிக்கும் என்பதால் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.

புத்தாடை விற்பனையை போலவே இறைச்சிகடைகளிலும் விற்பனை நடைபெற்றுவருகிறது

இதனிடையே கடந்த ஆண்டை விட இறைச்சிகளின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

* மட்டன் 1கிலோ எலும்புக்கறி 1000க்கும்,

* தனிக்கறி மற்றும் நெஞ்சுக்கறி 1100ரூபாய்க்கும்,

* எலும்பு கிலோ 600க்கும்,

* ஈரல்கிலோ 1100க்கும்,

* செவரொட்டி கிலோ 3 ஆயிரத்தி 200 ரூபாய்க்கும்,

* குடல் 1 கிலோ 400ரூபாய்க்கும்,

* நல்லி எலும்பு கிலோ 600ரூபாய்க்கும்,

* தலைக்கறி 450 ரூபாக்கும், விற்பனைக்கும்,

* சிக்கன் 1கிலோ கறி 250க்கும் ,

* போன்லெஸ் 360 ரூபாக்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இறைச்சி கடைகளில் சுகாதாரதுறை விதிகள் படி இறைச்சி விற்பனை செய்யப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். புத்தாடை விற்பனையை போலவே இறைச்சிகடைகளிலும் விற்பனை நடைபெற்றுவருகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Source: Read Full Article