ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: சிறப்பு நீதிமன்றங்கள் அதிகரிக்க அறிவுறுத்தல்!

ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு: சிறப்பு நீதிமன்றங்கள் அதிகரிக்க அறிவுறுத்தல்!
News Image

சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி, முடிந்தவரை அன்றாடம் விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குளு் விசாரணையை முடிக்க வேண்டும்- மதுரை அமர்வு.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை

தூத்துக்குடியைச் சேர்ந்த ஷாகுல்அமீது, மதுரை அமர்வில், "தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தன் மீதான லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கை விரைவில் விசாரித்து முடிக்கக்கோரி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "லஞ்ச ஒழிப்பு போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கில் மனுதாரர் மட்டுமே குற்றவாளியாக உள்ளார். 1988ம் ஆண்டின் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கை நாள்தோறும் விசாரித்து 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2023-ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டும் 3 ஆண்டுகளாக சாட்சிகள் விசாரணை மட்டுமே நடைபெறுகிறது. எனவே விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.

ஊழல் தடுப்புச் சட்ட வழக்கு

அரசுத் தரப்பில், "தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மட்டும் 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுமார் 80 வழக்குகள் நிலுவையில் உள்ளன" எனக் கூறப்பட்டது. உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கையில், "தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 2,423 வழக்குகள் நிலுவையில் உள்ளது. புதுச்சேரியில் 61 வழக்குகள் உள்ளன. 8 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற 30 மாவட்டங்களில், ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை அந்தந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், அமர்வு நீதிபதிகள் விசாரிக்கின்றனர்" எனக் கூறப்பட்டிருந்தது.

நியாயம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.

அதையடுத்து நீதிபதி, "ஊழல் தடுப்புச் சட்டத்தின் நோக்கம் ஊழல் வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்குத் உரிய தண்டனை கிடைக்கச் செய்வதன் மூலம் பொது நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதாகும். இதன் மூலம் பொதுச் சேவைகளில் நேர்மையைப் பேணவும், நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பாதுகாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு நீதிபதிகள், இயன்றவரை, வழக்குகளை நாள்தோறும் விசாரிக்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால நீட்டிப்பு தேவைப்பட்டால் அதற்காக காரணங்களை தெரிவிக்க வேண்டும். ஏற்கெனவே ஒரு வழக்கில், போக்சோ சட்டத்தின் நோக்கத்தை கருத்தில் கொண்டு போதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க மாநில அரசுக்கும் உயர் நீதிமன்ற நிர்வாகத்திற்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கட்டாய விதியைச் திறம்படச் செயல்படுத்தும் வகையில் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நியாயம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.

ஊழல் வழக்குகளை விசாரிக்க செய்வது சுமையை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் ஊழல் குற்றங்களை விசாரிக்க 8 மாவட்டங்களில் மட்டுமே சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் அந்த வழக்குகளை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளால்  விசாிக்கப்படுகிறது. பின்னர் பிஎன்எஸ்எஸ் சட்டம் வந்த பிறகு உயர் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கை அடிப்படையில் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஊழல் வழக்குகளின் விசாரணை முடிந்தளவு தினமும் நடத்தப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்க முயற்சிக்க செய்ய வேண்டும். இத்தகைய வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பது பொது நலனுக்கு உதவாது, குற்றம் சாட்டப்பட்டவரின் நலன்களையும் மேம்படுத்தாது.  முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் வழக்கமான குற்றவியல், உரிமையியல் பணிகளுடன், கீழமை நீதித்துறை தொடர்பான நிர்வாக விவகாரங்களையும் கவனிக்கின்றனர். அவர்களிடம் ஊழல் வழக்குகளை விசாரிக்க செய்வது சுமையை ஏற்படுத்தும்.

மனுதாரர் வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்

எனவே, ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முன்மொழிவு மீது உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சிறப்பு நீதிமன்றங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், பணியாளர்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்த உயர் நீதிமன்ற நிர்வாகத்திற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களில் போதுமான அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி, முடிந்தவரை அன்றாடம் விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குளு் விசாரணையை முடிக்க வேண்டும். மனுதாரர் வழக்கை 6 மாதத்தில் முடிக்க வேண்டும்"என உத்தரவிட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks