நான் யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை; திமுகவினர் அவதூறு பரப்புகின்றனர்!” – சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தை ராணி, எஸ்.பி.யிடம் புகார்.

உண்மைக்கு மாறான அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாக புகார்

சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி, வி.பி.ஜி. ராம் ஜி திட்டப் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர்கள் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், தன் மீது திமுகவைச் சேர்ந்த சிலர் உண்மைக்கு மாறான அவதூறு குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாகக் கூறி, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.

சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புகார் மனுவில், சிவகங்கை யூனியன் அலுவலகம் மூலம் நடைபெறும் வி.பி.ஜி. ராம் ஜி திட்டப் பணிகளுக்கு தான் யாரிடமும் எந்தவிதமான கமிஷனும் கேட்டதில்லை என்றும், பணிகள் அனைத்தும் PDO மூலம் முறையாகவும் சட்ட விதிகளின்படியும் நடைபெறுவதாகவும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் திமுகவினர் சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் தன் மீது அவதூறு பரப்பி நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒப்பந்ததாரர்கள் தெரிவித்ததாகக் கூறப்படும் கமிஷன் புகார் ஒருபுறமும், அதனை மறுத்து எம்.எல்.ஏ. அளித்துள்ள காவல்துறை புகார் மறுபுறமும் சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article