அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் குடியுரிமைப் பெற்று குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் அளவிற்கு இந்தியர்களுக்கு செல்வாக்கு உள்ளது.

செனட் தேர்தல்:

அமெரிக்காவில் செனட் தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள 35 மாகாணங்களுக்கு செனட் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் பாக்ஸ்டனும், ஜனநாயக கட்சி சார்பில் ஜேம்ஸ் டலாரிகோவும் செனட் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் இந்தியர்கள் டாலஸ் பகுதியில் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களின் வாக்குகள் டெக்சாஸின் செனட் யார்? என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்டது ஆகும்.

தோசை சுட்ட அமெரிக்க வேட்பாளர்:

இதையடுத்து, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜேம்ஸ் டலோரிகோ டாலஸ் பகுதியில் வசிக்கும் இந்தியர்களிடம் வாக்கு சேகரித்தார். அங்குள்ள ஒரு உணவகத்திற்குச் சென்ற அவர் இந்தியர்களின் மிகவும் விருப்பமான உணவுகளில் ஒன்றான தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.

Texas Democratic US Senate candidate @jamestalarico making a mouth watering masala dosa in Dallas! 🤤 https://t.co/z02BqoRSxr

— Nathan Punwani (@npunwani) October 30, 2026

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரே அந்த உணவகத்தின் சமையலறையில் சுடச்சுட தோசை சுட்டு வாழை இலையில் பரிமாறி அங்கு வந்த இந்தியர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலவையான விமர்சனம்:

பொதுவாக, இந்தியாவில்தான் தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக டீ கடையில் டீ குடிப்பது, கடைகளில் வடை சுடுவது, பாத்திரக்கடையில் பாத்திரம் விற்பது என விதவிதமாக வாக்கு சேகரிப்பார்கள். உணவகங்களுக்குச் சென்று தேநீர் போடுவது, தோசை சுடுவது போன்ற காரியங்களிலும் ஈடுபடுவார்கள். இதுபோன்ற வேட்பாளர்களின் செயல்கள் பலராலும் விமர்சிக்கப்படுவதும் உண்டு.

தற்போது வெளிநாட்டிலும் இந்திய அரசியல்வாதிகள் போல அமெரிக்க அரசியல்வாதிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக கட்சி வேட்பாளர் தோசை சுட்ட வீடியோவிற்கு பலரும் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, அங்குள்ள கோயில்களுக்கும் சென்று இந்தியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நமது ஊர்களில் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது போல வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Read Full Article