உலகில் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கு நிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் பல நாடுகள் விளையாடி வருகின்றனர். ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருகின்றனர்.

ஆஃப்கானிஸ்தான் அசத்தல்:

ஆப்கானிஸ்தான் அணி சமீபகாலமாகவே கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். சமீபகாலமாக அவர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் உலகளவில் அனைத்து அணிகளின் கவனத்தையும், அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தல் நிறைந்த அணியாக திகழும் அணியாக உருவெடுத்துள்ளது.

பல அணிகளையும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீழ்த்திய ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கு தரவரிசையில் 6வது இடம் பிடித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் பிடித்த அதிகபட்ச இடம் இதுவே ஆகும். நேற்று வெளியான புதிய தரவரிசைப் பட்டியலில் 2 ஆயிரத்து 926 புள்ளிகள் பெற்று 94 ரேட்டிங்குடன் 6வது இடத்தில் உள்ளது.

பின்னுக்குச் சென்ற முன்னாள் சாம்பியன்கள்:

இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த தரவரிசைப் பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணி முன்னாள் உலக சாம்பியன்களான இலங்கை மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முன்னேறியுள்ளது. இது அந்த நாட்டு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 6வது இடத்திலும், இங்கிலாந்து 7வது இடத்திலும் உள்ளது. வங்கதேசம் அணி 8வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 10வது இடத்திலும் உள்ளது.

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ற ஒன்று 1995ம் ஆண்டு உருவாகியிருந்தாலும் 2000ம் ஆண்டுக்கு பிறகே அவர்கள் கிரிக்கெட் வாரியமே வளரத் தொடங்கியது. முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டை அவர்கள் 2009ம் ஆண்டே விளையாடத் தொடங்கினர். முதல் டி20 போட்டியில் 2010ம் ஆண்டு விளையாடினார்கள்.

பிரபல வீரர்கள்:

ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஷீத்கானுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். ரஷீத்கான், குர்பாஸ், நபி, ஜட்ரான் என ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் மிகவும் பிரபலமான வீரர்கள் ஆவார்கள்.

ஆஃப்கானிஸ்தான் அணி இதுவரை 191 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் 96 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 88 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்துள்ளது. 6 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை. 67 பேர் இதுவரை ஆஃப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளனர்.

அதிகபட்சமாக ஒருநாள் போட்டியில் 343 ரன்கள் விளாசியுள்ளனர். குறைந்தபட்சமாக 58 ரன்கள் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக அந்த அணிக்காக ஜட்ரான் 177 ரன்கள் எடுத்துள்ளார்.

Source: Read Full Article