தவெக அரசு கவிழ்ப்பு முயற்சி: முன்னாள் துணை மேயர் மன்னன் விசாரணை முடிவு !

தவெக அரசு கவிழ்ப்பு முயற்சி: முன்னாள் துணை மேயர் மன்னன் விசாரணை முடிவு !
News Image

தவெக அரசை கவிழ்க்க- மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ விடம் உதவியாளர் மூலமாக  பண பேர பேசப்பட்ட வழக்கு - முன்னாள் துணை மேயர் மன்னன் மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜர் - நான்கரை மணி நேர  விசாரணை முடிவு.

தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காக 15 முதல் 30 கோடி

மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதுரூதீன் (எ) முஸ்தபாவிடம் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காக 15 முதல் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாக கடந்த 3 தினங்களுக்கு முன்பு மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்  மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதுருதீனின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும், அதிமுக நிர்வாகியுமான பி.எம் மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் முன்பாக ஆஜர்

பின்னர் பி.எம்.மன்னனை மதுரை மாவட்ட ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் முன்பாக ஆஜர்படுத்தியபோது  நவம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கெனவே சம்மன் வழங்கப்பட்டிருந்த நிலையில், அவரை முன்பே கைது செய்தது ஏன் என  காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி மன்னனை,  நீதிமன்றக் காவலில் வைக்கவும் மறுத்து ரூ.25 ஆயிரம் பிணையத்தொகை செலுத்த கூறி பி.எம்.மன்னனை விடுவித்து நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று உத்தரவிட்டார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர்  இன்று  ஆஜராக வேண்டும் என்று மன்னனுக்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில்  இன்று காலை 10 மணிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு மன்னன் ஆஜராகினார்.

வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்

பின்னர் காலை முதல் நான்கரை மணி நேரமாக பிஎம் மன்னனிடம் எம்எல்ஏ முஸ்தபாவின் உதவியாளரான கனி ராஜாவின் நேற்றைய விசாரணையில் அளித்த தகவலின் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் முஸ்தபா புகாரில் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதனையடுத்து விசாரணை முடிவடைந்து புறப்பட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பி.எம்.மன்னன், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க 10 மணிக்கு ஆஜராகினேன், கேட்க்கூடிய கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.  நல்ல முறையில் விசாரணை நடைபெற்றது. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக தயார். சட்டப்படி கையாள்வேன்,  நான் அரசியல் ரீதியான அனைத்து வழக்குகளையும் பார்த்தவன்  இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.

ஆடியோ ஆதாரம் உள்ளதாக முஸ்தபா கூறியது குறித்த கேள்விக்கு அதனை அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என பதில் அளித்தபடி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் எனக்கூறி புறப்பட்டார்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks