"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு

"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
News Image

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ மூலம் மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளதாகவும், இதற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ் மோகன் கூறியுள்ளார்.

பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்தான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தவெக அரசும், கடந்த ஆட்சியை ஆண்ட திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றது.

இந்த நிலையில், பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ராஜ்மோகன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். அதில், திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த பேட்டியில் கூறியதாவது,

இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ மூலம் மிகப்பெரிய ஊழலை திமுக செய்துள்ளது. எங்களுடைய ஆட்சியில் ஒரு புத்தகம் கூட நாங்கள் வாங்கவில்லை; ஒரு ரூபாய் கூட எங்களது கணக்கில் இருந்து செல்லவில்லை. பெரியார் நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்படும். கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி புத்தகம் கொள்முதலுக்கு ஆணை அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களில் விநியோகிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தகம் நூலகத்தில் அடுக்கப்பட்ட தேதிதான் சீல் வைக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கு யார் அழுத்தம் கொடுத்தார்கள்?

யார் கொடுத்த அழுத்தத்தில் அதிகாரிகள் இந்த புத்தகத்தை எல்லாம் வாங்கினார்கள். சென்னை கன்னிமாரா நூலகத்தில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அகல்விளக்கு பதிப்பகத்திடம் இருந்து புத்தகம் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள். பெரியார் பெயரில் இவ்ளோ பெரிய ஸ்கேம் செய்துவிட்டு வெக்கமே இல்லாமல் வந்து எங்க மேல் பழியை போட்டு இருக்கிறார்கள். திமுக சார்பில் பேசுபவர்களுக்கு தெம்பு இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்க? கமலாம்பாள் கருணாநிதி, தாமரை முரளி, ஸ்டாலின், பவித்ரா கருணாநிதி இவங்கலாம் யாரு? இப்படி ஒருத்தவங்கள யாருக்குமே தெரியவில்லை. ஒரு மிஷின் போட்டு கள்ள நோட்டு அடிக்கிற மாதிரி AI பயன்படுத்தி இப்படி ஒரு ஸ்கேம் பண்ணி இருக்காங்க. புத்தகத்துலையே இவ்ளோ ஸ்கேம்னா அந்த பில்டிங் கட்னதுல எவ்ளோ ஸ்கேம் பண்ணியிருப்பாங்க?

வாத்தி ரெய்டு நடக்கும்

கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதிலும் ஊலழ் நடந்துள்ளது.
எல்லா நூலகத்திலும் வாத்தி ரெய்டு நடக்கும். இது சாதாரண ஊழல் இல்லை; குப்பைகளை விட மோசமான புத்தங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியது. திமுக அரசியல் தலைமைதான் முழு பொறுப்பேற்க வேண்டும். அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் கண்டயறியப்படும். பிள்ளைகள் படிக்கும் புத்தகங்களில் ஊழல் செய்த திமுக தமிழ்நாட்டின் மாணவர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks