"திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரம்" வாலிபரை சரமாரியாக குத்திக் கொன்ற பெண்ணின் தந்தை

"திருமணத்தை மீறிய உறவால் ஆத்திரம்" வாலிபரை சரமாரியாக குத்திக் கொன்ற பெண்ணின் தந்தை
News Image

"திருமணம் மீறிய உறவு"

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 34 ). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், அதே பகுதியில் கணவனை பிரிந்து வசித்து வரும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெண்ணின் தந்தை பலமுறை கண்டித்தும் தகாத உறவை கைவிடவில்லை என சொல்லப்படுகிறது.

ரமேஷை எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் தகாத உறவை தொடர்ந்து வந்ததால், ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, சக்கரபாணி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று ரமேஷை மீண்டும் எச்சரித்துள்ளார். அவர் கேட்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரமேஷை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

"கைது செய்து விசாரணை"

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் ரமேஷின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ரமேஷ் ஏற்கனவே போக்சோ வழக்கில் கைதாகி கடந்த ஜனவரி மாதம் வரை சிறையில் இருந்துள்ளார்.

ஜாமினில் வெளியே வந்த ரமேஷ், கணவனை பிரிந்து வசித்து வந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இதை கண்டித்த அவரின் மனைவி ஷர்மிளா , தனது பேச்சை கேட்காததால் கோவம் அடைந்து அவரை பிரிந்து தனது அம்மா வீட்டிற்கே சென்று வாழ்ந்து வந்திருக்கிறார்.

மனைவி பிரிந்ததையும் பொருட்படுத்தாமல் , ரமேஷ் கள்ளத் தொடர்பை தொடர்ந்துள்ளார். இதில் பெண்ணின் தந்தை ஆத்திரமடைந்து ரமேஷை கத்தியால் குத்தி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து செம்பியம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கள்ளக் காதலில் ஈடுபட்ட பெண்ணின் தந்தையான திருவிக நகரை சேர்ந்த பாபு ( வயது 53 ) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks