மேகமலை கிராம மக்களுக்கு புது நம்பிக்கையூட்டிய ஆட்சியர்! - நொடிப்பொழுதில் மனம் மாறிய மக்கள்!

மேகமலை கிராம மக்களுக்கு புது நம்பிக்கையூட்டிய ஆட்சியர்! - நொடிப்பொழுதில் மனம் மாறிய மக்கள்!
News Image

மேகமலை கிராமங்களுக்கு சென்று, தாங்கள் வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களிடம் புது நம்பிக்கையை விதைத்திருக்கிறார் தேனி மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி IAS.

ஆவேசத்துடன் இருந்த மக்களை ஆஸ்வாசப்படுத்திய ஆட்சியர்

தேனி மாவட்டம் மேகமலையில் காலங்காலமாக வசிக்கும் மலை வாழ் மக்களை, நேரடியாக அவர்களது கிராமங்களுக்கே சென்று சந்தித்திருக்கிறார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி. எந்த அரசு அதிகாரியும் தங்கள் கிராமங்களுக்கு வரக்கூடாது என்று பெருங்கோபத்துடன் கொந்தளித்த மக்களை, தன்னுடைய செயல்பாடுகளால் வழக்கமான பேரன்புமிக்கவர்களாக மீண்டும் மாற்றிக் காட்டியிருக்கிறார் ஆட்சியர். வனத்தை ஆக்கிரமித்து குடியேறியிருப்பதாக கூறி, அவர்களை உச்சநீதிமன்றம் அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டிருக்கும் நிலையில், அச்சத்திலும் ஆவேசத்திலும் இருந்த மக்களை சந்தித்து, அரசு உங்களுக்கு ஆதரவாகவே நிற்கிறது என கூறி, அவர்களை ஆஸ்வாசப்படுத்தியிருக்கிறார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி

வனத்துறை அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளால் அரசு மீது கடும் அதிருப்தி அடைந்த மக்கள், தங்களை கிராமங்களைவிட்டு அரசே விரட்ட நினைக்கிறது என தவறாக புரிந்துகொண்டு, அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அந்த மலை மக்கள் நடத்தி வந்த நிலையில், உங்களை வெளியேற்றும் எண்ணம் தவெக அரசுக்கு துளி கூட இல்லை என்றும், உங்களை பாதுகாக்கவே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம் என்றும் அந்த மக்கள் மத்தியில் பேசி, அவர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்திருக்கிறார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி.

மக்களிடம் ஏற்பட்ட புது நம்பிக்கை

கிராமத்தை விட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்தால்கூட, வனத்துறையினர் தங்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும், அது தங்களுக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் உணர்ச்சிவசப்பட்டு பேசிய அந்த அப்பாவி மலை வாழ் மக்களிடம்,  மலையை விட்டு கிழே இறங்கி தான் செல்லும்போதே அத்தனை வனத்துறை சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் பேசி, இனி இதுபோன்று செய்யக்கூடாது என உத்தரவிடுகிறேன் என்று கூறி அவர்களின் அச்சத்தையும் போக்கியிருக்கிறார் ஆட்சியர்.

கடும் சட்டப்போராட்டங்களை முன்னெடுக்கும் அரசு

துணை ராணுவப் படையை கொண்டுகூட, மலையில் வசிக்கும் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேரை காலிச் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசு அதற்கு எதிராக கடுமையான சட்டப்போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. கடந்த காலங்களில் மலை வாழ் மக்கள் வசிப்பிடம் தொடர்பான போதிய ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சரியாக தாக்கல் செய்யாததால் மட்டுமே இப்படியான நிலை ஏற்பட்டது என்று சட்டப்பேரவையிலேயே பேசியிருந்தார் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார். அதோடு தேனி சென்று அந்த மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்த நிலையில், இன்று ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்றிருக்கிறார்.

மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற முயற்சி

நூறாண்டுகளுக்கு மேலாக, சுதந்திரத்திற்கு முன்னர் முதல், கண்டமனூர் ஜமீன் காலந்தொட்டு, கிட்டத்தட்ட 5 தலைமுறைகளுக்கு மேலாக மலையில் வசித்து வரும் மக்களின் ஆதாரங்களும் ஆவணங்களும் தமிழக அரசு திரட்டியிருக்கிறது. அதை விரைவில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மக்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுத் தர தீவிர முயற்சி நடந்து வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks